கிருஷ்ணாபுரம் கோவிலில் சிதையும் சிற்பங்களை அறநிலைய துறை பாதுகாக்குமா?

கிருஷ்ணாபுரம் கோவிலில் சிதையும் சிற்பங்களை அறநிலைய துறை பாதுகாக்குமா?

கிருஷ்ணாபுரம் கோவிலில் சிதையும் சிற்பங்களை அறநிலைய துறை பாதுகாக்குமா?

கல்லில் கலை வண்ணம் கண்ட கிருஷ்ணாபுரம் கோவில் சிற்பங்கள், பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. ‘இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருநெல்வேலி – திருச்செந்துார் சாலையில், 12 கி.மீ.,ல் உள்ளது கிருஷ்ணாபுரம். இங்கு, குமார கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில், 1564ல் துவங்கி, 1572ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது வெங்கடாஜலபதி கோவில். திருப்பதியில் செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்களை, அங்கு செல்ல
முடியாதவர்கள், இங்கு செலுத்துகின்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


கோவிலை கட்டிய மன்னர் பெயரிலேயே, ‘கிருஷ்ணாபுரம்’ என அழைக்கப்படுகிறது. 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், வெளி மண்டபம், உற்சவ மண்டபம், உள்மண்டபம், சுவாமி சன்னதி என உள்ளது. உற்சவ, உள் மண்டபங்களில் அமைந்துள்ள, 42 சிலைகள் ஒவ்வொன்றும், பிரமாண்டத்தின் உச்சமாக உள்ளன. உற்சவர் மண்டபத்தின் முன்புள்ள அர்ஜுனர் சிலை, குறத்தி, ராஜகுமாரனைத் துாக்கிச் செல்லுதல், நாடோடிப் பெண்ணின் நடனம், கர்ணன் சிலை, குறவன், அரசகுமாரியைத் துாக்கிச் செல்லுதல், தேவகன்னியின் நடனம் ஆகிய ஆறு கல்துாண் சிலைகள் பிரமிப்பூட்டுகின்றன.

சிலைகளின் முகத்தில் தெரியும் புன்னகை, கோபம் போன்ற உணர்ச்சிகள் கூட, நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. உள் மண்டபத்தில் உள்ள வீரபத்திரன், மன்மதன், பீமன் ஆகிய சிற்பங்களில் உள்ள கல் துாண்கள், நடனமாது ரதி தேவி சிற்பங்கள், நாயக்கர் கால சிற்பிகளின்
கைவண்ணத்தை பறைசாற்றுகின்றன.

யானைக்கும், காளைக்கும் ஒரே முகம் இருக்கும் படியாக செதுக்கப்பட்டிருப்பதும் விநோதமாக உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ், இக்கோவிலுக்கு வந்து சென்ற பின் தான் மத்திய, மாநில அரசுகள் இக்கோவிலை கண்டுகொண்டன. ஆனாலும் கூட, இன்றளவும் அரிய வகை சிற்பங்கள் பாதுகாக்கப்படாமல், கைகளால் தொடும் துாரத்தில் உள்ளன.

இதனால், கற்களை கொண்டு தட்டி, சிலையின் இசையை கேட்கிறோம் என, பலரும் அவற்றை உடைத்து விட்டனர். குறிப்பாக, மன்மதன் சிலையின் கரும்பு வில் உடைந்து விட்டது. கரும்பு வில்லின் மேல்பகுதியில் உள்ள, துவாரத்தில் ஒரு குண்டூசியை போட்டால், கீழே தானாக வந்து விழும் அளவுக்கு வில்லை நுட்பமாக வடிவமைத்திருந்தனர். இவ்வாறு, பல்வேறு சிலைகளிலும் அவற்றின் முழு உருவத்தை சிதைத்து வருகின்றனர்.

‘சிலைகளை சுற்றிலும் கண்ணாடி கூண்டுகள் அமைத்து பாதுகாக்க, இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தொல்லியல் ஆர்வலர்கள் விரும்புகின்றனர். இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு, சிற்பங்களின் சிறப்புகளை விளக்கி கூற, பணியாளர்கள் இல்லை. இந்த கோவிலுக்கு என தனி அதிகாரி இல்லாமல், திருச்செந்துார் முருகன் கோவில் இணை ஆணையர் தான், கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். எனவே, இக்கோவிலுக்கு, தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: