எமது மதிப்பிற்குரிய ஐயா தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் காலமானார்!

(புகைப்படம் - ஐயா பெரும்புலவர் கி.தா.பச்சையப்பன் அவர்களோடு உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி)

(புகைப்படம் – ஐயா பெரும்புலவர் கி.தா.பச்சையப்பன் அவர்களோடு உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி)

தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழகத் தமிழாசிரியர் கழக முன்னாள் தலைவருமான தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் சென்னையில் இன்று காலமானார்.

புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், அவருக்கு வயது 85. சென்னை, வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்தார். இன்று காலையில் ஒரு வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது, 10.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றிய கி.த.பச்சையப்பன், தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளராக நீண்ட காலம் செயல்பட்டார். பள்ளி ஆசிரியராக மட்டுமின்றி, தனித்தமிழைப் பாதுகாக்கும் பல்வேறு கருத்தரங்குகள், கூட்டங்கள், உரையரங்கங்களில் பச்சையப்பனின் குரல் ஒலித்தபடி இருந்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்கபடியாக, ‘தமிழ் ஓசை’ நாளேட்டில் மொழி நடை ஆசிரியராகப் பணியாற்றி, அன்றாடச் செய்தியில் தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததில், புலவர் கி.த.பச்சையப்பனுக்கு முக்கிய பங்கு உண்டு. அதன் தாக்கத்தில் இன்றைய 24 மணி நேரத் தொலைக்காட்சிகளில் தனித்தமிழ்ச் சொற்கள் புழக்கத்துக்கு வந்தன.

இயல்பாகத் தனித் தமிழில் உரையாடும் புல்வர் பச்சையப்பன், தன்னுடன் ஒரு முறை சந்தித்துப் பேசுகிறவர்களையும் தனித்தமிழில் உரையாடும் பழக்கத்தை உருவாக்கிவிடுவது அவரின் தனிச் சிறப்பு.

அரசுப் பணியில் இருந்தபோதும், தமிழ் மொழி, இனப் பிரச்னைகள் தொடர்பான போராட்டங்களில் அதிக அளவில் கலந்துகொண்டார். 1999-ல் தமிழ்வழிக் கல்விக்காக நூறு தமிழறிஞர்கள் கலந்துகொண்ட சாகும்வரை உண்ணாவிரதத்தில் முன்னிலையாகப் பங்கேற்றார். பின்னர், அப்போதைய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் அழைத்துப் பேசி, அந்த உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில் இவர் முக்கியமாகப் பங்கேற்றார்.

பின்னர், சக தமிழறிஞர்களுடன் திரளாக டெல்லிக்குச் சென்று செம்மொழியாக தமிழை அறிவிக்குமாறு கோரி 2002 காலகட்டத்தில் போராட்டம் நடத்தினார். அதையடுத்தே அப்போதைய பா.ஜ.க. அரசு, அந்தக் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தது.

தமிழறிஞர்கள், கவிஞர்கள், புரட்சி எண்ணம் கொண்டவர்கள், பொதுவுடைமையாளர்கள், இயக்கத்தினர், நண்பர்கள், குடும்பத்தினர் என அவர் பிரிவால் வாடும் அனைவருடனும் இணைந்து உலகத் தமிழர் பேரவை இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: