கீழடியில் பிப்ரவரி முதல் வாரத்தில் 4ம் கட்ட அகழாய்வு தொடங்கும்!!!

கீழடியில் பிப்ரவரி முதல் வாரத்தில் 4ம் கட்ட அகழாய்வு தொடங்கும்!!!

கீழடியில் பிப்ரவரி முதல் வாரத்தில் 4ம் கட்ட அகழாய்வு தொடங்கும்!!!

சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் தமிழக தொல்லியல் துறை சார்பில், நான்காம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. பள்ளிச்சந்தை புதுாரில் 2015ல் மத்திய தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு துவங்கியது. பண்டைய தமிழர் நாகரிகம் குறித்து கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு நடந்தது.


 உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும்


இதில் 2,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் பயன்படுத்திய உறை கிணறுகள், மருந்து பானைகள், கழிவு நீர் கால்வாய்கள் உள்ளிட்ட சான்றுகள் கண்டறியப்பட்டன. காலத்தை கண்டறிய சில மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. மூன்றாம் கட்ட அகழாய்வு தொடங்க இருந்த நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு ஸ்ரீராமன் நியமிக்கப்பட்டார்.

அது முடிந்த பின் நான்காம் கட்ட ஆய்வு குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடாத நிலையில், ”தமிழக தொல்லியல் துறை சார்பில் ஜன.,22ல் நான்காம் கட்ட ஆய்வு தொடங்கும்,” என அமைச்சர் பாண்டிய ராஜன் அறிவித்தார். ஆனால் சொன்னபடி நேற்று ஆய்வு தொடங்குவதற்கான எந்த நிகழ்வும் செய்யப்படவில்லை.

தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், ’55 லட்ச ரூபாய் செலவில் நான்காம் கட்ட ஆய்வை அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். அமைச்சர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் ஆய்வு தொடங்கும்’ என்றனர்.

சென்னையை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் கூறுகையில், ”மாநில அரசு அகழாய்வை தொடர்ந்தால், மத்திய அரசு அதில் தலையிடாது. இது தமிழர் நாகரிகத்தை கண்டறியும் செயலை முடக்குவதாகும்” என்றார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி எப்போது? அ... கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி எப்போது? அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்! சிவகங்கை மாவட்டம் கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் ...
தமிழக தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு நடத்த மத்த... தமிழக தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி! சிவகங்கை மாவட்டம் கீழடியில், மாநில தொல்லியல் துறை அகழாய்வு நடத்த மத்திய ...
தமிழ் உலகம் – 1 தமிழ் உலகம் - உலகத் தமிழர் பேரவையின் அச்சிட்ட - மின்னிதழ் தமிழ் உலகம் -1 : (உலகத் தமிழர் பேரவையின் - மின்னிதழ் உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டிருக்கி...
தமிழர் நாகரிகத்தை அடங்கிய கீழடி அகழாய்வு மூடப்பட்ட... தமிழர் நாகரிகத்தை அடங்கிய கீழடி அகழாய்வு மூடப்பட்டு, இனி 4-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் அறிவிப்பு! தமிழர்களின் தொன்மையான...
Tags: