கீழடி அகழாய்வில், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழுவின் ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திரபோஸ் வலியுறுத்தல்!

கீழடி அகழாய்வில், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழுவின் ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திரபோஸ் வலியுறுத்தல்!

கீழடி அகழாய்வில், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழுவின் ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திரபோஸ் வலியுறுத்தல்!

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்- சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் உள்ள குறியீடுகள் குறித்து பார்வையிடுவதற்காக சங்க கால குறியீட்ட ஆய்வாளர் திருச்சியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் நேற்று வந்தார்.

ஆய்விற்கு பின் அவர் கூறியதாவது: 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை தமிழ் எழுத்துக்கள், சிந்து சமவெளி நாகரீகத்தில் கிடைத்த எழுத்துகள் அனைத்தும் தமிழ் எழுத்துக்களே, எழுத்துகள், ஓவியங்களுக்கு முந்தையவை குறியீடுகள், தமிழகத்தில் குறியீடுகள் குறித்த ஆய்வு வெகு சிலரால் மட்டுமே நடத்தப்படுகிறது.

கீழடியில் கிடைத்த பொருட்களில் உள்ள குறியீடுகள், ஓவியங்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை பற்றி ஆராய குழு அமைக்க வேண்டும். தமிழகத்தில் பாறை ஓவியங்கள், குறியீடுகள், எழுத்துகள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பலர் உள்ளனர். அவர்களை கொண்ட குழு அமைத்து கீழடி பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும்.

அப்போது தான் தமிழர் எழுத்துக்கள் குறித்து வெளியுலகிற்கு தெளிவாக எடுத்துரைக்க முடியும், கீழடியில் கிடைத்த குறியீடுகள் சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளை ஒத்து உள்ளது. சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் என கீழடி ஆய்வு மூலம் தெரிய வருகிறது. தமிழக கோயில்களில் குறியீடுகள் அதிகளவில் உள்ளன. திருப்புவனத்தில் திருக்குறியீடு, பிரம்ம குறியீடு என இரண்டு குறியீடுகள் காணப்படுகின்றன.

பொதுவாக எல்லா கோயில்களிலும் திருக்குறியீடு உள் நுழைவாயில் படியில் பிரதானமாக இருக்கும், நாளடைவில் அவற்றை அகற்றி உள்ளனர், என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: