கீழடி நாகரிகம் சங்க காலத்துக்குப் பிற்பட்டது என பொய்யாக ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவது வருத்தமளிக்கிறது! – வரலாற்று ஆய்வறிஞர் மா.சோ.விக்டர்

கீழடி நாகரிகம் சங்க காலத்துக்குப் பிற்பட்டது என பொய்யாக ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவது வருத்தமளிக்கிறது! - வரலாற்று ஆய்வறிஞர் மா.சோ.விக்டர்

கீழடி நாகரிகம் சங்க காலத்துக்குப் பிற்பட்டது என பொய்யாக ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவது வருத்தமளிக்கிறது! – வரலாற்று ஆய்வறிஞர் மா.சோ.விக்டர்

தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட போது அதற்கு உடந்தையாக இருந்தவர்களுடன் வாய் மூடி மௌனம் சாதித்த அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று தமிழர்களின் எழுச்சி கண்டு இதுவரைத் தங்கள் கைப்பிடிக்குள் இருந்த ஆளுமை கை விட்டுப் போய் விட்ட நிலையில் மக்கள் பக்கம் சார்ந்து கீழடிக்காகப் போராட முன்வந்திருப்பதும் வரவேற்கத்தக்கதே.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இப்போராட்டங்களையும் திசை திருப்பும் வகையில் ஆய்வுகள் தொடரும் என அறிவித்துக் கொண்டே கீழடி நாகரிகம் சங்க காலத்துக்குப் பிற்பட்டது என்றவாறு ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவது உண்மையில் அவர்களுக்கு அந்த அகழ்வாய்வைப் பற்றி உண்மையான செய்திகளை வெளியிட வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் கீழடி பற்றி விவாத நிகழ்ச்சியொன்றை நடத்தியது. அதில் பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நான் சென்னைக்குச் சென்று அந்நிகழ்வில் பங்கேற்க மறுத்து விட்ட நிலையில் எனது வீட்டிற்கே வந்து என்னைப் பங்கேற்கச் செய்தனர். கீழடி பற்றிய செய்திகளை நான் கூற முற்பட்ட போதெல்லாம் அந் நிகழ்ச்சியை நடத்திய நெறியாளர் என்னைப் பேச விடவில்லை. கீழடியில் ஆய்வுகள் நிறுத்தப்பட்டதற்கான காரணம், தற்போதைய மத்திய அரசே என்று குற்றம் சாட்டிப் பேச அடியெடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தார். தற்போதைய மத்திய பாஜக அரசு மட்டுமல்லாது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசும் தமிழர் நலனுக்கு எதிரானதே என்பதை தவிர்க்க முயன்றார். உண்மையில் அந்நிகழ்ச்சி கீழடி தொடர்பான செய்திகளை விவாதிக்காமல் பாஜகவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை விளக்கும் அரசியல் நிகழ்வாகவே நடத்தப்பட்டது. கீழடி ஆய்வு பற்றிய செய்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. எனது நிலைப்பாடு இரு கட்சிகளுமே தமிழருக்கு எதிரானவை ஆகும். அதில் ஒன்றை மட்டும் குறை கூறிப் பேசத் தூண்டினாலும் நான் தொடர்ந்து கீழடியைப் பற்றியே பேச முற்பட்டதாலும் எனது உரை துண்டிக்கப்பட்டதோடு, மேற்கொண்டு பேச வாய்ப்புகளே வழங்கப்படவில்லை மேற்கண்ட நிகழ்வு தமிழக ஊடகங்கள் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை விளக்கவும், அதற்குத் தமிழைப் பயன்படுத்தவும் முயன்று வருகின்றன என்பதையே காட்டுகின்றது…

Masovictor Ariyalur – அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து….

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: