கீழடி அகழாய்வு குழிகள் மூடும் பணி ஒத்திவைப்பு!

கீழடி அகழாய்வு குழிகள் மூடும் பணி ஒத்திவைப்பு!

கீழடி அகழாய்வு குழிகள் மூடும் பணி ஒத்திவைப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதூரில் நடந்த அகழாய்வில், குழிகள் மூடும் பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல் துறை மூலம், அகழாய்வு நடந்த, குழிகளை அதிகாரிகள் ஹெலிகாம் மூலம் ஆய்வு செய்தனர். நான்காம் கட்ட அகழாய்வு, ஏப்ரல் 18-ல் துவங்கியது.

அகழாய்வில் யானை தந்தம், தங்க காதணி, அச்சுக்கள், பொம்மைகள், பானை ஓடுகள், உறைகிணறு உள்ளிட்ட, 7,000-த்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. அகழாய்வு, செப் 30-ல் நிறைவு பெற்றது. தொல்லியல் துறை இணை இயக்குனர், சிவானந்தம் தலைமையிலான அதிகாரிகள் அகழாய்வு குழிகளை, ஹெலிகாம் கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், குழிகள், பொருட்கள் எடுக்கப்பட்ட இடத்தின் உயரம், அகலம் உள்ளிட்ட அனைத்தும், ஹெலிகாம் மூலம் பதிவு செய்யப்பட்டன. ஆவணப்படுத்துவதற்காக, அகழாய்வு குழிகள் புகைப்படம் எடுக்கப்பட்டன.

தொடர்ந்து மழை பெய்வதால், குழிகள் மூடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரம் குழிகள் மூடும் பணி நடைபெறும். பொருட்கள் குறித்த கண்காட்சி, இந்த மாத இறுதியில் நடத்தப்படும் என தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் பற்றி மாணவர்களுக்கு... கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்க ஏற்பாடு! சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தையில் தமிழக தொல்லியல் துறை ...
கீழடி அகழாய்வு 30-ல் நிறைவு!... கீழடி அகழாய்வு 30-ல் நிறைவு! சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், தமிழக தொல்லியல் துறை சார்பில், ஏப்ரல், 19ல், 55 லட்சம் ரூ...
தமிழக தொல்லியல் துறையால் கீழடியில் 4 ஆயிரத்து 700 ... தமிழக தொல்லியல் துறையால் கீழடியில் 4 ஆயிரத்து 700 பொருட்கள் கண்டுபிடிப்பு! தமிழக தொல்லியல் துறையால் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடிய...
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 2 ஆயிரம் ஆண்டுகள்... கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு! கீழடியில் நடந்து வரும் நான்காம் கட்ட அகழாய்வில் சுடுமண் ...
Tags: