கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி எப்போது? அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்!

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி எப்போது? அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்!

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி எப்போது? அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு, தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சிவகங்கை மாவட்டம் கீழடியில், மூன்று கட்ட ஆய்வுப் பணிகள் நடந்துமுடிந்து மூடப்பட்டுவிட்ட நிலையில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் ம.பாண்டியராஜன் மற்றும் கதர் கிராமத் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர், இன்று ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜனிடம், 4-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் பாண்டியராஜன், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளை அரசு மேற்கொள்ளும். 4ம் கட்ட அகழாய்வு மழைக்காலம் முடிந்த உடன் ஒன்றரை மாதங்களில் பணிகள் தொடங்கும். நான்காம் கட்ட அகழாய்வுப் பணிக்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கப்படும். இந்த அகழாய்வு, 6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும். மத்திய தொல்பொருள் ஆய்வு மையத்துடன் இணைந்து செயல்பட உள்ளோம். தமிழகத்தில் உள்ள அருங்காட்சியங்களைப் பலப்படுத்த அரசு முயற்சி செய்யும் என்று தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: