நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது தமிழக அரசு!

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது தமிழக அரசு!

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது தமிழக அரசு!

தூத்துகுடியில் நடைபெற்று வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் கடந்த மூன்று நாட்களாக உச்சத்தில் இருந்த நிலையில் போராட்டக்காரர்களின் தொடர்பு இணைப்புகளை கட்டுப்படுத்த சமீபத்தில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது. தூத்துகுடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை நிறுத்தப்பட்டதால் பல முக்கிய வேலைகள் முடங்கின. குறிப்பாக ஆன்லைனில் கல்லூரிகளில் விண்ணப்பிக்க்கும் மாணவர்களுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


இந்த நிலையில் மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கியதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை முதல் தூத்துகுடியில் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. அத்தியாவசியமான கடைகள் திறக்கப்பட்டன. அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது. அதேபோல் விரைவில் தூத்துகுடி மாவட்டத்திலும் இணையதள சேவை தொடங்கப்படும் என கூறப்படுகிறது இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

`தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ... `தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை! தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்...
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று... தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்! இடம் மற்றும் நேரம் : 23 May - 4P...
ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 8 பேர... ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்! ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 1...
தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு ஸ்டெர்லைட் போராட்டம... தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு ஸ்டெர்லைட் போராட்டம் உருவெடுத்தது ஏன்? மார்ச் 24ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந...
Tags: 
%d bloggers like this: