`தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்’ – தமிழக உள்துறை நடவடிக்கை!

`தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை!

`தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்’ – தமிழக உள்துறை நடவடிக்கை!

தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக உள்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


தூத்துக்குடியில் நிலவிவரும் சூழ்நிலை தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் துப்பாக்கிச் சூடுகளால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு, கல்வீச்சு தூத்துக்குடி மாவட்டத்தைக் களேபரமாக மாற்றியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர். இதற்கிடையே, தூத்துக்குடி சம்பவ தகவல்கள் உடனுக்குடன் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் இப்போராட்டம் குறித்த தாக்கம் ஏற்படுகிறது. பல பகுதிகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து மறியல், ஆர்ப்பாட்டம் என நடத்தி வருகின்றனர். சேலம், திருச்சி, சென்னை எனப் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களின் இணையதள சேவையை முடக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “போராட்டம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியைத் தடுப்பதற்காக சேவைகள் முடக்கப்பட வேண்டும். 23 முதல் 27ம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த 3 மாவட்டங்களிலும் இணையதள சேவை முடக்கப்படு வேண்டும். இணையதளத்தை முடக்குவதால் வதந்தி பரவுவது தடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகள் முடக்கப்படுவதால் பொதுமக்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதள பயன்பாடுகள் குறைக்கப்படும் என்பதால் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிகிறது.

இணைய சேவை முடக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது:

இந்நிலையில், தூத்துக்குடி, குமரி, நெல்லையில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் அவரச வழக்காக இன்று மதியம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ஸ்டெர்லைட் ஆலை : மக்கள் போராடுவது ஏன்? – 5 ம... ஸ்டெர்லைட் ஆலை : மக்கள் போராடுவது ஏன்? - 5 முக்கிய கேள்விகள்! ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமையன்று ஊர் ம...
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று... தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்! இடம் மற்றும் நேரம் : 23 May - 4P...
தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு ஸ்டெர்லைட் போராட்டம... தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு ஸ்டெர்லைட் போராட்டம் உருவெடுத்தது ஏன்? மார்ச் 24ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந...
ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 8 பேர... ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்! ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 1...
Tags: