சர்வதேச போட்டியில் 5 தங்கம் சென்னை மாணவர்கள் சாதனை!

சர்வதேச போட்டியில் 5 தங்கம் சென்னை மாணவர்கள் சாதனை!

சர்வதேச போட்டியில் 5 தங்கம் சென்னை மாணவர்கள் சாதனை!

சர்வதேச அளவில் நடந்த தடகள போட்டியில், சிவந்தி பள்ளி மாணவ – மாணவியர், ஐந்து தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களை வென்று, சாதனை படைத்துள்ளனர்.

சர்வதேச அளவிலான, தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், நேபாளில் சமீபத்தில் நடந்தன.

இதில், இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஜெர்மன் உள்ளிட்ட எட்டு நாடுகளிலிருந்து, ஜூனியர் அளவிலான போட்டியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ – மாணவியர் பங்கேற்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இதில், நடை ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தியா சார்பில், தமிழகத்தில் இருந்து, 1,000 பேர் பங்கேற்றனர். அதில், சென்னை, ராமாபுரம், சிவந்தி மெட்ரிக்குலேஷன்மேல்நிலை பள்ளியிலிருந்து, ஆறு மாணவ -மாணவியர் பங்கேற்றனர்.

இவர்களில், 400 மீ., ஓட்டப் பந்தயத்தில் ஆகாஷ்; 200 மீட்டரில், முகமது சல்மான்; 100 மீட்டரில், வெங்கடேஷ் வெற்றி பெற்று, தங்கம் பதக்கம் வென்றனர். குண்டு எறிதலில், ஷப்ரானா ஆப்ரின், ஈட்டி எறிதலில், அஜிதா, தங்கம் வென்றனர். வட்டு எறிதலில், சேரலாதன் வெள்ளி பதக்கம் வென்றார்.

தினமலர்

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று, சாதனை படைக்கும... தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று, சாதனை படைக்கும் ஆவடி கால்பந்து வீராங்கனை! ஆவடியைச் சேர்ந்த, 16 வயது கால்பந்து வீராங்கனை, தேசிய அளவில் தங்கப் பதக...
மூன்று தங்க பதக்கங்கள் வென்ற அரசு பள்ளி மாணவன் பார... மூன்று தங்க பதக்கங்கள் வென்ற அரசு பள்ளி மாணவன் பாரா ஒலிம்பிக்கில் சாதிப்பேன் என்று உறுதி! மாற்றுத்திறனாளிக்கு, மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில...
வைரத்துக்கு கிடைத்தது தங்கம்: மாற்றுத் திறனை வென்ற... வைரத்துக்கு கிடைத்தது தங்கம்: மாற்றுத் திறனை வென்ற வீரர்! மதுரையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலம்...
குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெர... குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த இரு வடக்கு தமிழர்கள்! அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வவுன...
Tags: