ரஷ்யாவில் நடந்த சர்வதேச ஏரோபிக் ஃபிட்நஸில் வெள்ளி பதக்கம் தமிழக மாணவி!

ரஷ்யாவில் நடந்த சர்வதேச ஏரோபிக் ஃபிட்நஸில் வெள்ளி பதக்கம் தமிழக மாணவி!

சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரஜா (17), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் படித்து வருகிறார். 8-ம் வகுப்பில் இருந்தே, ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டிக்கு சுப்ரஜா தயாராகி வந்துள்ளார். மாவட்ட, மாநில அளவில் பதக்கங்களை குவித்த சுப்ரஜா, தேசிய அளவிலான போட்டிகளிலும் மகுடம் சூடியுள்ளார்.

2017-ம் ஆண்டு நடந்த ஆசிய அளவிலான ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில், தனி நபர் பிரிவில் 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தையும், மூன்று பேர் பங்கேற்கும் போட்டியில் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். சர்வதேச அளவில் சாதனை படைக்க வேண்டுமென்ற விடா முயற்சியுடனும், தினமும் பல மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த நவம்பர் 1-ம் தேதி ரஷ்யா நாட்டின் மாஸ்கோ நகரில் நடந்த சர்வதேச அளவிலான ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில், இந்தியா சார்பில் சுப்ரஜா பங்கேற்றார். இந்தியாவில் இருந்து 8 பேர் கலந்துகொண்ட நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து 1500 பேர் வரை பங்கேற்றனர். இதில், தனிநபர் ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து, சுப்ரஜா வெள்ளி பதக்கம் வென்று தாயகம் திரும்பியுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: