கல்வெட்டுகள் மூலம் வெளிப்படும் இலக்கியங்கள்!

கல்வெட்டுகள் மூலம் வெளிப்படும் இலக்கியங்கள்!

கல்வெட்டுகள் மூலம் வெளிப்படும் இலக்கியங்கள்!

காரைக்குடி, கல்வெட்டு ஆராய்ச்சி மேம்படுவதன் மூலமே நம்முடைய சங்க கால இலக்கியங்களின் உண்மை தன்மை உறுதி செய்ய முடியும் என காரைக்குடியில் நடந்த கருத்தரங்கில் வரலாற்று பேரவை செயலர் பேசினார். அழகப்பா பல்கலை வரலாற்று துறை சார்பில் தமிழக வரலாற்று பேரவையின் 24-வது கருத்தரங்கம் நடந்தது. அழகப்பா பல்கலைக் கழக பதிவாளர் தொடங்கி வைத்தார். வரலாற்று துறை தலைவர் வரவேற்றார். பாரதிதாசன் முன்னாள் துணைவேந்தர் முன்னிலை வகித்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


தமிழக வரலாற்று பேரவை பொது செயலாளர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கிறது. இந்திய வரலாற்றில் முக்கியமானது அசோகர் கால கல்வெட்டுக்கள். தற்போது தென் இந்தியாவில் உள்ள அகழ்வாராய்ச்சிகள் சங்க கால வரலாற்றை அறிய உதவுகிறது. இலக்கியத்தில் எழுத்துக்களாக உள்ளவை அகழ்வாராய்ச்சியின் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும். 1922-ம் ஆண்டு வரை இந்திய வரலாறு வேதங்களை அடிப்படையாக கொண்டே இருந்தது. அதன்பிறகு சிந்து சமவெளி நாகரீகத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த வரலாற்றின் அடிப்படையும் மாறலாம். நிலவியல் ஆராய்ச்சி மட்டுமே நடந்து வருகிறது. கடல் ஆராய்ச்சி என்பது மிக குறைந்த அளவிலேயே உள்ளது. கடல் ஆராய்ச்சி மேம்படாததற்கு நிதிபற்றாக்குறை, தொழில் நுட்பம், திறமையான ஆராய்ச்சியாளர்கள் இல்லாமை காரணம். கடல் ஆராய்ச்சி மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2004-ம் ஆண்டுக்கு முன்பு வரை கடல் கொண்டது என படித்துள்ளோம். ஆனால், சுனாமி வந்த பிறகே கடல் கொண்டது என்பது நம்பக் கூடியதாக உள்ளது, என்றார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

‘பைந்தமிழ் ஆசான்’ கா.நமச்சிவாய முதலியார்!... ‘பைந்தமிழ் ஆசான்’ கா.நமச்சிவாய முதலியார்! 1906ஆம் ஆண்டு வரை தமிழ்ப் பாடங்களை படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடங்களையே படிக்க வேண்டிய நிலை இருந்தது....
தமிழ் மொழியில் சிறந்த படைப்புகளுக்காக, வேலு சரவணன்... தமிழ் மொழியில் சிறந்த படைப்புகளுக்காக, வேலு சரவணன், மனுஷி ஆகியோருக்கு ‘சாகித்ய அகாடமி’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன! சாகித்ய அகாடமி அமைப்பு, ஆண்டு ...
சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு!... சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு! தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிர...
தொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்... தொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு ‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள்! எழுத்திலே உயிர் எழுத்தென்றும் மெய் எழுத்தென்றும் பிரி...
Tags: 
%d bloggers like this: