ஓசூர் நகராட்சி : இன்னுமா தமிழகத்தில் தெலுங்கு மொழி ஆதிக்கம்!

ஓசூர் நகராட்சி : இன்னுமா தமிழகத்தில் தெலுங்கு மொழி ஆதிக்கம்!

ஓசூர் நகராட்சி : இன்னுமா தமிழகத்தில் தெலுங்கு மொழி ஆதிக்கம்!

தமிழ்நாட்டில் உள்ள ஓசூர் நகராட்சி கட்டடத்தில் தெலுங்கு மொழியில் பெயர் பலகை நிறுவியுள்ளனர், நகராட்சி உறுப்பினர்கள். ஏன் என காரணம் கேட்டால், தெலுங்கர்கள் இங்கு அதிகமாக வாழ்கிறார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால், ஆந்திராவில் தமிழர்கள் அதிகமாக வாழும் சித்தூர் நகராட்சி கட்டடத்தில் தமிழுக்கு இடமில்லை என்பதை படத்தில் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அங்கு என்னவோ, தெலுங்கு மொழி மட்டுமே காணப்படுகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


யார் மொழிப் பற்றாளர்கள் யார் இனவெறியர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள இயலும். தமிழர்கள் விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்.

இதுபோலவே, கடந்த 2010 ஆம் ஆண்டு மாநகரட்சிகள், நகரட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றின் அலுவலங்களில் “தமிழ் வாழ்க” என்ற சொல் பொறித்த மின்னொளிப் பலகை அமைக்கப்படுவது கட்டாயமாகப்பட்டு, தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது (அரசாணை எண்: 67, நாள்: 03.06.2010).

ஆனால் இந்த அரசாணையைப் புறக்கனித்துவிட்டு “தமிழ் வாழ்க” மின்னொளிப் பலகையின்றி எல்லை நகரான இதே ஓசூரில் புதிய நகராட்சி அலுவலகம் திறக்கப்பட்டபோது நிறுவப்படவில்லை. மேலும் நகராட்சி கட்டடத்தின் முகப்பில் ஓசூர் நகராட்சியின் பெயர் பலகை ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் முதன்மைப் படுத்தப்பட்டும், தமிழ் முதன்மையற்றும் பொறிக்கப்பட்டும் இருந்தது. இது ஓசூர் வாழ் மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது.

இதனால், தமிழ் உணர்வாளர்கள் போராட்ட எச்சரிக்கை செய்து, அரசு நிர்வாகத்திற்கு மனு செய்த பின்பே, ஓசூர் நகராட்சி கூட்டத்தில் “தமிழ் வாழ்க” என்ற மின்னொளி பலகையும் நகராட்சி நிர்வாகத்தால் பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 13ம் நூற்றாண்டு கல... ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு! ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவில் திருப்பணியின் போது, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஓய்சாள அரச...
ஒசூர் அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால ... ஒசூர் அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சுவர் நடுகல் கண்டெடுப்பு ! கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே பாரந்தூர் கிராமத்தில் 13-ஆம் நூற்றாண்...
நடு கல் – வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணக... நடு கல் - வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிய கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், நல்லுாரில், 14ம் நுாற்றாண்டை சேர்ந்த, நடு கற்க...
பாழடைந்து வரும் 1,100 ஆண்டு வரலாறு சமணர் கோவில் அழ... திருப்பூர் அருகே, 1,100 ஆண்டுகள் பழமையான சமணர் கோவில், எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. புராதன சின்னமான இக்கோவிலை புதுப்பித்து பாதுகாக்க...
Tags: