நீங்கள் வரலாற்றை மாற்ற முயற்சிக்கின்றீர்களா: தொல்லியல் துறையிடம் உயர்நீதிமன்றம் அதிருப்தி!

நீங்கள் வரலாற்றை மாற்ற முயற்சிக்கின்றீர்களா: தொல்லியல் துறையிடம் உயர்நீதிமன்றம் அதிருப்தி!

நீங்கள் வரலாற்றை மாற்ற முயற்சிக்கின்றீர்களா: தொல்லியல் துறையிடம் உயர்நீதிமன்றம் அதிருப்தி!

‘கீழடி அகழாய்வுப் பொருட்களை, எந்த நோக்கத்திற்காக இட மாற்றம் செய்ய முடிவு செய்தீர்கள். வரலாற்றை மாற்ற முயற்சிக்கின்றீர்களா?’ என, தொல்லியல் துறையிடம் உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சென்னை வழக்கறிஞர் கனிமொழி மதி தாக்கல் செய்த பொதுநல மனு:

சிவகங்கை மாவட்டம், கீழடியில், 110 ஏக்கரில் ஆற்றங்கரை நாகரிகம் பற்றிய தொல்லியல் அகழாய்வு நடக்கிறது. இந்நாகரிகம், 2,000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.

கீழடியில், பழங்கால பொருட்களை மத்திய தொல்லியல் துறையினர் சேகரித்துள்ளனர். அப்பொருட்களை, பெங்களூருவிலுள்ள அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல, மத்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். கீழடியில் மியூசியம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்திருந்தார்.

தமிழக தொல்லியல் துறை கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கை:

கீழடி அகழாய்வில், 6,018 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1,893 பொருட்கள், 2016ல், பெங்களூரு மியூசிய ஆய்விற்கு கொண்டு செல்லப்பட்டன. மீதி, 4,125 பொருட்கள் கீழடியில் உள்ளன.

‘கார்பன்’ ரசாயன சோதனைக்குப் பின்தான், அவற்றின் வயதை கண்டறிய முடியும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை, நீதிபதிகள் ஏ.செல்வம், என். ஆதிநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.

மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்:

கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வில், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றி எழுத்துப்பூர்வமாக அறிக்கை தயாரிக்கவும், ஆவணப்படுத்தவும் வேண்டியுள்ளது. பெங்களூரு மியூசியத்தில் மட்டுமே, இப்பணியை மேற்கொள்ள முடியும். இது இந்தியா முழுவதும் உள்ள நடைமுறை. பெங்களூரு எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

நீதிபதிகள்:

பெங்களூரில் வைத்து எழுதுவதை, சிவகங்கையில் வைத்து எழுத முடியாதா. எந்த நோக்கத்திற்காக கீழடி அகழாய்வு பொருட்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளீர்கள். அனைத்து தொல்லியல் நிபுணர்களையும் இங்கு வரவழைக்க வேண்டியதுதானே.

நீங்கள் வரலாற்றை மாற்ற முயற்சிக்கின்றீர்களா… கீழடி அகழாய்வு பணி பொறுப்பில் ஏற்கனவே இருந்த அதிகாரியை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்… அந்த அதிகாரியின் இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி, மனுதாரர் மனு தாக்கல் செய்யலாமே.

மத்திய தொல்லியல் துறை வழக்கறிஞர்:

அகழாய்வு பொருட்களை ஆய்வு செய்வதற்கான அடிப்படை வசதிகள் இங்கு இல்லை. எனவே, பெங்களூரு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அகில இந்திய அளவில், தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதனடிப்படையில், ஏற்கனவே கீழடியில் இருந்த அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டார்.

மனுதாரர் வழக்கறிஞர்:

ஒரு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அத்தொகையை கீழடி அகழாய்வு பணிக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். கொந்தகையில் மியூசியம் அமைக்க, தமிழக அரசு நிலம் ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது. தற்போது, கீழடி அகழாய்வு பணிக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஸ்ரீராம் ஆஜரானார். விசாரணையை, ஜூன் 23க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: