ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு சிறையில் சம்பாதித்த பணத்தை வழங்கிய ஆயுள் கைதி!

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு சிறையில் சம்பாதித்த பணத்தை வழங்கிய ஆயுள் கைதி!

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு சிறையில் சம்பாதித்த பணத்தை வழங்கிய ஆயுள் கைதி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன், சிறையில் பணிபுரிந்து சம்பாதித்த பணத்தை ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய நிதியாக வழங்கியுள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


ஸ்ரீபெரும்புதூரில் 21.5.1991-ல் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு வெடிக்கச்செய்து படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி பூந்தமல்லி பொடா நீதிமன்றம் 1999-ல் தீர்ப்பளித்தது. பின்னர் முருகன் உள்ளிட்ட 4 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தனது 19-வது வயதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் 2014-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே ஆயுள் கைதி ரவிச்சந்திரன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் பணிபுரிந்து சேர்த்த பணத்தை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு நன்கொடையாக வழங்கி உள்ளார்.

சிறையில் கைதிகளுக்கு வேலை வழங்கப்பட்டு சம்பளம் வழங்கப்படும். ஒருவருக்கு நூறு ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டால் அதில் 50 ரூபாய் கைதி பராமரிப்பு கட்டணமாக எடுத்துக் கொள்ளப்படும். இருபது ரூபாய் சம்பந்தப்பட்ட கைதியால் பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியில் சேர்க்கப்படும். மீதமுள்ள முப்பது ரூபாய் கைதியின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு அவரது தேவைக்கு வழங்கப்படுவது வழக்கம்.

ரவிச்சந்திரன் தனது 27 ஆண்டுகள் சிறையில் பணிபுரிந்ததற்காக வழங்கப்பட்ட பணத்தை வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கும், சிறையில் தனக்கு தேவையான பொருட்களை வாங்கவும் செலவிட்டுள்ளார். இவர் இதுவரை நான்கு முறை பரோலில் (விடுமுறை) சென்றுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் சம்பாதித்த வகையில் ரவிச்சந்திரனின் சிறை கணக்கில் ரூ.20 ஆயிரம் வரை சேர்ந்திருந்தது.

இந்த மொத்த பணத்தையும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக ரவிச்சந்திரன் வழங்கியுள்ளார். ரவிச்சந்திரன், ராஜீவ் கொலை வழக்கு: சிவராசன் டாப் சீக்ரெட் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது ரவிச்சந்திரனின் ரூ.20 ஆயிரத்தை ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் வழங்கினார்.

தற்போது 15 நாள் பரோலில் உள்ளார் ரவிச்சந்திரன் சொத்துப் பாகப் பிரிவினைக்காக அவருக்கு மார்ச் 5 முதல் 19 வரை உயர் நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ளது. பரோல் பாதுகாப்பு செலவை அரசே ஏற்க உத்தரவிடக் கோரி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கிய விவரத்தை நீதிபதிகளிடம் வழக்கறிஞர் பி.திருமுருகன் தெரிவித்தார். இதையடுத்து ரவிச்சந்திரனின் பரோல் விடுமுறை கால பாதுகாப்புக்கான செலவை அரசு ஏற்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவரது பரோல் காலம் மார்ச் 19 மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.

  • தி இந்து
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: