விடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே! தமிழக மீனவர்கள் மனக் குமுறல்!

விடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே! தமிழக மீனவர்கள் மனக் குமுறல்!

விடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே! தமிழக மீனவர்கள் மனக் குமுறல்!

இலங்கை கடற்பகுதி விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து போது எந்தவொரு கடத்தல்கார்களும் உள்ளே நுழைய முடியவில்லை என தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது கடத்தல் பொருட்களின் பிறப்பிடமாக இலங்கை மாறியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையில் போதைப் பொருள், தங்கம், கேரள கஞ்சா உள்ளிட்டவைகள் அதிகளவில் கடத்தி வரப்படுகின்றன. கடந்த 10-ம் தேதி இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட 200 கிலோவுக்கும் மேற்பட்ட கேரள கஞ்சாவினை தமிழக காவல் துறையினரால் பறிமுதல் செய்திருந்தனர். கடல் மார்க்கமாக இவை கடத்தி வரப்பட்டன.

இந்த செய்தி குறித்து ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில். “கடத்தல் பொருட்களின் பிறப்பிடமாக இலங்கை உள்ளது. சர்வதேச அளவில் இலங்கைக்கு வரும் விமானங்களில் தங்கம், கஞ்சா, ஹெரோயின் போன்ற பொருட்கள் இறக்கப்பட்டு அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் மூலமும், படகுகள் மூலமும் கொண்டு வரப்படுகிறது. சமீபகாலமாக விமான நிலையத்தில் கெடுபிடி அதிகமானதால் மீண்டும் கடல் மார்க்கத்தை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, இராமநாதபுரம் கடல் பகுதிக்கு நவீன படகுகள் மூலம் கடத்தில் வரப்பட்டு மோட்டார் சைக்கிள், கார்கள் மூலம் வெளியே எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 120 கிலோ தங்கம் 3 மாதத்தில் பிடிபட்டது. எனினும். அந்த தங்கத்திற்கான உரிமையாளர் யார் என்பது இதுவரையில் கண்டிறிப்படவில்லை. அதன் பிறகு கடலோர கடத்தல்கள் சற்று குறைந்தது. தற்போது மீண்டும் கடலோர கடத்தல் தொடங்கி இருக்கிறது. இதனால் இனி மீனவர்களுக்கு தொல்லைகள் தொடங்கிவிடும். ஆனால் இலங்கை கடற்பகுதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை எந்த கடத்தல்காரனும் உள்ளே நுழைய முடியவில்லை. அதே போல அந்நிய சக்திகளும் வர முடியவில்லை. ஆனால் இப்ப கடத்தல்காரர்கள் வருகின்றனர். இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தாக்குகின்றனர். சீன நாட்டவர்கள் உள்ளே வந்து செல்கின்றனர். இப்படி நமது நாட்டுக்கான பாதுகாப்பே குறைந்து வருகிறது. நடுக்கடலில் பாதுகாப்பில் இருந்த இந்திய கடற்படை கண்ணில் மண்ணை தூவிட்டு தான் கடத்தல் கஞ்சா கடத்தப்படுகின்றது” என தெரிவித்தனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

இரானில் சிறைப்பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தாய... இரானில் சிறைப்பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்புகிறார்கள்! - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்! இரான் நாட்டு கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தம...
தமிழக மீனவர்களின் 118 படகுகளை விடுவித்து இலங்கை நீ... தமிழக மீனவர்களின் 118 படகுகளை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு! இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை நீத...
இரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்... இரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி! இரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை...
தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்பட... தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை! ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ...
Tags: 
%d bloggers like this: