தமிழ் நாட்டில் இருந்து ஈழம் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழ் நாட்டில் இருந்து ஈழம் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழ் நாட்டில் இருந்து ஈழம் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழ் நாட்டில் இருந்து ஈழம் திரும்புவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


கடந்த 2014-ம் ஆண்டு 396 பேரும், 2015ம் ஆண்டு 452 பேரும், 2016ம் ஆண்டு 852 பேரும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் அலுவலகத்தின் உதவியுடன் இலங்கை திரும்பி இருந்தனர்.

நேற்றைய தினம் மட்டும் வேலூர் முகாமில் இருந்து 57 அகதிகள் நாடு திரும்பியதுடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 809 பேர் நாடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1983-ம் ஆண்டுக்குப் பின்னர் பல லட்சம் பேர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்றிருப்பதுடன், அவர்களில் 62,629 பேர் இந்தியாவில் உள்ள 107 முகாம்களிலும், 36,794 பேர் முகாம்களுக்கு வெளியில் பல்வேறு பகுதிகளிலும் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் நாளைய தினம் 36 பேர் தமிழகத்தில் இருந்து நாடு திரும்பவிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

முல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42,178 குடும்பங்... முல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42 ஆயிரத்து 178 குடும்பங்களில், 6 ஆயிரத்து 260 குடும்பங்கள் ஆண்கள் இல்லாமல், பெண்களே வழி நடத்தும் குடும்பங்கள் என மா...
“நாங்கள் இலங்கையர்கள் அதில் எந்தப் பிரச்சணையும் இல... எமது பிரச்சனைகள் பல நாட்டில் ஏற்படவுள்ள அரசியல் யாப்பின் மூலம் பல சாதகம் ஏற்படும் என வட மாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். மத்திய...
தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் விடுதலைப் புலிப் ப... சீனாவைச் சேர்ந்த வில்லியன் சீயா எனும் இளைஞர் உலகின் தாய்மொழியான தமிழ் மொழியை மிகவும் ஆழமாக நேசிப்பதோடு, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களையும் அவரின் வழி...
தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?... தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா? தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு, தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட...
Tags: