இந்தியில் பெயர் பலகை வைத்த பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்!

இந்தியில் பெயர் பலகை வைத்த பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்!

இந்தியில் பெயர் பலகை வைத்த பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்!

ஈரோட்டில் இயங்கிவரும் அரசுப் பேருந்து ஒன்றின் பெயர்ப் பலகையில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் கிளம்பியது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறைப் பகுதியில் இயங்கிவரும் 17-ம் எண் கொண்ட அரசுப் பேருந்து ஒன்றின் பெயர்ப்பலகையில், ‘பெருந்துறை மார்க்கெட்’ என்று ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தமிழகப் பேருந்தில் இந்தியில் பெயர்ப் பலகை வைப்பதா?’ என பலரும் அதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

கடந்த இரண்டு நாள்களாகவே, இந்தியில் எழுதப்பட்ட இந்தப் பெயர்ப் பலகையைக் கண்டித்த பதிவுகள் ஈரோடு மாவட்டத்தில் வைரலாகி வருகின்றன. ‘தமிழ்நாட்டில் ஓடும் பேருந்தில் எதற்காக இந்தி? வடநாட்டில் வாழும் தமிழர்களுக்காக எங்கும் பெயர்ப்பலகை தமிழில் வைக்கப்படுவதில்லை’ என்றும் ‘ரயில் பயணச் சீட்டில் ஊர் பெயரை தமிழில் அச்சிடும் முறையையே நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகுதான் பெற்றிருக்கிறோம். தமிழகப் பேருந்தில் இந்தியில் எழுதப்படுவதை ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் போனால் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் இத்தகைய இந்தித் திணிப்பு பரவலாகும் அபாயம் இருக்கிறது’ என பலரும் எச்சரித்து தங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

மேலும், ‘தற்போதைய மத்திய அரசாங்கமானது ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்கிற ரீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியை தமிழகப் பேருந்துகளின் பெயர்ப் பலகையில் திணிக்க ஆளும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறதோ’ என்று பலரும் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

பெருந்துறை பேருந்தில் இந்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டது ஏன் என போக்குவரத்து வட்டாரங்களில் விசாரித்தோம். “சமூக வலைதளங்களில் பரவி வரும் பெயர்ப் பலகைகொண்ட அந்தப் பேருந்தானது பெருந்துறை சிப்காட் பகுதியிலிருந்து பெருந்துறை மார்க்கெட் பகுதிக்குச் சென்று வருகிறது. சிப்காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் பெரும்பாலானோர் வசித்து வருவதால், அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கவே இந்தியில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருக்கலாம். அதிலும் குறிப்பாக ஞாயிறுதோறும் பெருந்துறையில் வாரச் சந்தை நடக்கும். அந்தச் சந்தைக்கு சிப்காட்டைச் சுற்றியுள்ள வட மாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் வந்து காய்கறி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிச் செல்வார்கள். மற்றபடி அந்தப் பேருந்தில் இந்தி மட்டுமல்ல தமிழும் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரத்துக்குப் பிறகு அந்த இந்திப் பெயர்ப் பலகையும் அகற்றப்பட்டுவிட்டது” என்றனர்.

இந்தி எழுக்கள் இருந்தது தொடர்பாக அப்பேருந்தின் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அதிகாரிகளிடம் எந்த ஒரு அனுமதியும் வாங்காமல் இந்தியில் பெயர்பலகை வைத்ததற்காக, அப்பேருந்தின் நடத்துநர் சீனிவாசனை 1 நாள் பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து கவிந்தப்பாடி பணிமனையில் கேட்ட போது, வாரம் ஒரு முறை மட்டுமே இந்த இந்தி எழுத்துக்கள் இருப்பதாகவும் பெருந்துறை சிப்காட் பகுதியில் அதிகப்படியாக உள்ள வட மாநிலத்தவர் அங்கு ஞாயிற்றுகிழமையில் மட்டும் நடைபெறும் சந்தைக்கு செல்லுவதற்கு வசதியாக, ஹிந்தியில் எழுதப்பட்டு இருந்ததாகவும், இனிமேல் இந்தி எழுத்துக்கள் இருக்காது எனவும் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: