சதுரங்க வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ரூ.5 லட்சம்: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்!

சதுரங்க வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ரூ.5 லட்சம்: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்!

சதுரங்க வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ரூ.5 லட்சம்: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (31–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், 34–வது உலக சதுரங்க வாகையர் போட்டி, காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டி மற்றும் ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டி ஆகிய போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பி.வி.நந்திதாவுக்கு ஊக்கத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


நாமக்கல் மாவட்டம், பள்ளத்தூர், படவீடு கிராமத்தைச் சேர்ந்த பி.வி.நந்திதா 2016-ம் ஆண்டு மே மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டியில் பட்டம் பெற்றார்.

மேலும் ஆகஸ்டு மாதம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான 34-வது உலக சதுரங்க வாகையர் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கமும் வென்று நாட்டிற்கும், குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

இந்த சாதனைகளைப் பாராட்டி அவர் மேலும் பல சாதனைகள் படைக்க ஊக்கப்படுத்தும் வகையில், முதல் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சதுரங்க விளையாட்டு வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ஊக்கத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, பாராட்டினார்.

இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொதுமேலாளர் (பொறுப்பு) சார்லஸ் மனோகர் மற்றும் நந்திதாவின் பெற்றோர் உடனிருந்தனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

உலகக் கோப்பை வாள்வீச்சு: தமிழக வீராங்கனை பவானி தேவ... உலகக் கோப்பை வாள்வீச்சு: தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார்! இந்தியாவின் முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, தேசிய அளவிலும் ஆசிய அளவிலு...
இந்திய சாதனை புத்தகத்தில் முத்திரை பதித்த ராமநாதபு... இந்திய சாதனை புத்தகத்தில் முத்திரை பதித்த ராமநாதபுரம் மாவட்ட 3 வயது பெண் குழந்தை! ஒரு நிமிடத்தில் 69 தலைவர்களின் பெயர்களை கூறிய 3 வயது பெண் குழந்தை ...
வீரநங்கை வேலுநாச்சியாரின் (Velu Nachchiyar) வரலாறு... வீரநங்கை வேலுநாச்சியாரின் (Velu Nachchiyar) வரலாறு! இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி ஆண்டு கொண...
கடற்கரை (பீச்) கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்ற... கடற்கரை (பீச்) கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்றும் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லையே - வீராங்கனை அந்தோணியம்மாள் ஆதங்கம்! பீச் கபடி போட்டியில் 2 முற...
Tags: