சோழர் கால நடுகல் சிதைப்பு ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்!

சோழர் கால நடுகல் சிதைப்பு ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்!

சோழர் கால நடுகல் சிதைப்பு ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட, ராஜேந்திர சோழன் கால நடுகல் சிதைக்கப்பட்டுள்ளது, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், மொரப்பூர் அருகேயுள்ள, கெரகோட அள்ளியில், 11ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் ஒன்றை, 1974ல், தமிழக தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. அதில், ராஜேந்திர சோழனின், கங்கை , கடாரம் வெற்றியை குறிப்பிடும் வாசகங்கள் உள்ளன. இந்த கல்வெட்டை படியெடுத்த தொல்லியல் துறையினர், அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை; அதனால், நடுகல் சிதைக்கப்படடு, பாதியளவே உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


நடுகல்லில், வீரனின் வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் உள்ளன. புறமலை நாட்டை சேர்ந்த, பாகலப்பள்ளியில் சூழ்ந்த எதிரி படையை எதிர்கொண்ட, பப்பையன் என்ற வீரன் இறந்து விடுகிறான். அவனது வீரத்தை போற்றும் வகையில், மகன் பாலிதேவன், நடுகல்லை பதிவு செய்துள்ளான். அதில், தந்தையின் வீரம்; அவருக்கு பெண் கொடுத்த மாமனார போன்ற விபரங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த அரிய நடுகல், தற்போது, துண்டு துண்டாக சிதை க்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டு கால வரலாற்று பொக்கிஷத்தை கண்டு படியெடுத்த, தொல்லியல் துறை, 50 ஆண்டுகள் கூட,அவற்றை பாதுகாக்காதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர், கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: