ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவ்க்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவ்க்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவ்க்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 30 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆரோக்கிய ராஜிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன் கிழமை எழுதிய கடிதத்தில், “18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4*400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசு சார்பாக இந்த சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீங்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் பெற்று தமிழ் நாட்டையும், இந்தியாவையும் உங்களின் திறமையால் பெருமையடையச் செய்ததை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகையாக, கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.30 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். அதன்படி, ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை பெற நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள்.

உங்களையும், உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் வாழ்த்துகிறேன். வருங்காலத்திலும் இத்தகைய சாதனைகள் பல படைத்திட வாழ்த்துகிறேன்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: