கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பீரங்கி பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு!

கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பீரங்கி பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு!

கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பீரங்கி பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு!

வேலூர் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கியை, அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


வேலூர் கோட்டையில், ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே உள்ள மாட்டு தொழுவத்தில், குப்பை கொட்ட, கடந்த மாதம், 23ல் பள்ளம் தோண்டிய போது, பீரங்கி புதைந்திருப்பது, கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, வேலூர் தொல்பொருள் ஆய்வுத்துறை முதுநிலை உதவி பராமரிப்பு அலுவலர் ஈஸ்வரன் கொடுத்த தகவலின்படி, சென்னை தொல்லியல் துறை உதவி ஆய்வாளர் வெற்றிச்செல்வி தலைமையிலான, குழுவினர், நேற்று காலை, பாதுகாப்பாக பீரங்கியை வெளியே எடுத்தனர். பின், பீரங்கி சுத்தம் செய்யப்பட்டு, வேலூர் கோட்டையில் உள்ள, மத்திய தொல்பொருள் துறை அருங்காட்சியகத்தில், பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இதுகுறித்து, உதவி ஆய்வாளர் வெற்றிச்செல்வி கூறியதாவது: வேலூர் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி, கி.பி., 17 அல்லது 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த, ஆங்கிலேயர்கள் காலத்தில், போர் வீரர்களால் பயன்படுத்தப்பட்டது. சுத்தமான இரும்பினாலான பீரங்கி, பூமியில், ஒரு மீட்டர் ஆழத்தில் இருந்தது. இதன் நீளம், நான்கு அடி, சுற்றளவு, 12 இன்ச், எடை, 1,000 கிலோ உள்ளது. கிழக்கிந்திய கம்பனிக்கு சொந்தமானது என்பதற்கான அடையாளம் உள்ளது. முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால், டெல்லியில் இருந்து, தொல்லியல் துறையினர் விரைவில் வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: