அழகன்குளம் அகழாய்வு வரும், 30-ம் தேதிக்குள் நிறைவு பெறும் என தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!

அழகன்குளம் அகழாய்வு வரும், 30-ம் தேதிக்குள் நிறைவு பெறும் என தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!

அழகன்குளம் அகழாய்வு வரும், 30-ம் தேதிக்குள் நிறைவு பெறும் என தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!

அழகன்குளம் அகழாய்வு, அடுத்த வாரத்தில் முடியும் என, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த, அழகன்குளம் கிராமத்தில், சங்க கால தொல்லியல் எச்சங்கள் அதிகம் கிடைத்தன. அதையடுத்து, அங்கு, 1990 முதல், ஏழு கட்டங்களாக, தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்து உள்ளது.

தமிழக அரசு உத்தரவின்படி, 55 லட்சம் ரூபாய் நிதியில், விரிவான அகழாய்வு பணிகள், இந்தாண்டு, மே மாதம் துவங்கின. அகழாய்வு பிரிவு இயக்குனர், பாஸ்கர் தலைமையில் நடந்து வரும் அகழாய்வு, அடுத்த வாரம் நிறைவடைய உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அழகன்குளம், சங்ககால தமிழர்களின் துறைமுக பகுதியாக இருந்துள்ளது. அங்கு, குடியிருப்புகள் இருந்துள்ளன. அவற்றுக்கான சான்றுகளாக, பிராமி எழுத்துக்கள் உள்ள பானை ஓடுகள், மணிகள், உலோக பொருட்கள் என, 6,000-த்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
அவை, வரலாற்றில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும், 30-ம் தேதிக்குள், இந்த அகழாய்வு முடியும். பின், தொல்பொருட்கள், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். விரைவில், அகழாய்வு அறிக்கை தயாரிக்கப்படும். மத்திய தொல்லியல் துறை, சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடத்தி வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், இதுவரை, 1,800 தொல்பொருட்களும், சிறு கட்டட பகுதியும் கிடைத்துள்ளன. அழகன்குளம் தொல் பொருட்கள், வரலாற்று ஆய்வாளர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

மூன்றாம் கட்ட அகழாய்வை முடித்த கீழடியில், நான்காம்... மூன்றாம் கட்ட அகழாய்வை முடித்த கீழடியில், நான்காம் கட்ட ஆய்வு நடக்குமா? சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை நடத்தும் மூன்றாம் கட்ட அக...
கீழடி அகழாய்வு நடைபெற்ற பகுதியை மூடாமல் பாதுகாக்க ... கீழடி அகழாய்வு நடைபெற்ற பகுதியை மூடாமல் பாதுகாக்க வேண்டும்: மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு! கீழடியில் அகழாய்வு நடைபெற்ற பகுதியை மூடாமல் பாதுகாக்க வேண...
தொல்லியல் துறையிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளின் தூண்ட... தொல்லியல் துறையிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளின் தூண்டுதலே கீழடி அகழாய்வுக்கு அடுத்த மாதம் மூடு விழாவா? தமிழர்களின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட கீழடி அக...
கீழடி, அழகன்குளம் அகழாய்வை அடுத்து பட்டரைபெரும்புத... கீழடி, அழகன்குளம் அகழாய்வை அடுத்து பட்டரைபெரும்புதுாரில் பண்டைய தமிழர் நாகரீகமா? ராமநாதபுரம் மாவட்டத்தின் அருகே அழகன்குளத்தில் அகழாய்வு செய்து வரும்...
Tags: 
%d bloggers like this: