ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை மீட்பு!

ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை மீட்பு!

ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை மீட்பு!

சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திர கபூரால் கடத்தப்பட்டு, ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட, பிரித்தியங்கரா தேவி சிலையை, தமிழக போலீசார் மீட்டு வந்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 2011 அக்., 30ல், ஜெர்மனியில் பதுங்கியிருந்த, சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திர கபூரை, 86, கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். தற்போது, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் விசாரணை நடத்தியதில், தன் கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து, அர்த்தநாரீஸ்வரர், பிரித்தியங்கரா தேவி உட்பட, ஆறு சிலைகளை, ௨௦௦௨ல் திருடி, வெளிநாடுகளுக்கு கடத்தியது தெரிய வந்தது. ஆனால், சிலைகள் திருடு போனது பற்றி, கோவில் நிர்வாகம், போலீசில் புகார் அளிக்கவில்லை. இதனால், மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., – பொன். மாணிக்கவேல், தானே புகார்தாரராக மாறி, வழக்கு பதிவு செய்து, சிலைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் பலனாக, சில மாதங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் இருந்து, அர்த்தநாரீஸ்வரர் சிலை மீட்கப்பட்டது. நேற்று (26/05/2017), பிரித்தியங்கரா தேவி சிலையை மீட்டு, போலீசார் சென்னைக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து, கூடுதல், டி.ஜி.பி., – பிரதீப் வி பிலிப் மற்றும் ஐ.ஜி., – பொன். மாணிக்கவேல் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி:

பிரித்தியங்கரா தேவி சிலை, சோழப்பேரரசி சேரன் மாதேவியால் நிறுவப்பட்டது. 1,046 ஆண்டுகள் பழமையான இந்த கற்சிலை, 2,010 கிலோ எடை உடையது; சர்வதேச சந்தையில், இதன் மதிப்பு, 1.46 கோடி ரூபாய். மும்பையில் இருந்து, கடல் மார்க்கமாக அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு, பின், ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்டது. இந்த சிலை தற்போது மீட்கப்பட்டு, தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. விருத்தாசலம் நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்று, கும்பகோணத்தில் உள்ள சிலைகள் காப்பகத்தில் பாதுகாக்கப்படும். மேலும், சிங்கப்பூரில், 18, அமெரிக்காவில், 31, ஆஸ்திரேலியாவில், நான்கு என, 53 சிலைகளை மீட்கவும் முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் தமிழகத்திலிருந... ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து சிலைகள்! தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து ஐம்பொன் சிலைகள்...
வெளிநாடுகளில் தமிழக சிலைகள் மீட்கும் முயற்சியில் க... வெளிநாடுகளில் தமிழக சிலைகள் மீட்கும் முயற்சியில் போலீஸ் தீவிரம்! சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரால், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள...
தமிழர்கள் தண்டனைக்குட்படுத்தும், செம்மர கடத்தலும்,... செம்மர கடத்தலும், சர்வதேச வலைப் பின்னலும்! உலகில் எங்கும் கிடைக்காத அபூர்வ ரக மரவகையைச் சேர்ந்தது செம்மரம். ஆந்திராவின் சித்தூர், கடப்பா, நெல்லூர்,...
ஆஸ்திரேலியாவின் பாடத் திட்டத்தில் தமிழை சேர்க்க வல... ஆஸ்திரேலியாவின் பாடத் திட்டத்தில் தமிழை சேர்க்க வலியூறுத்திய ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹக் மெக்டோர்மோட்! உலகில் சுமார் 70 மில்லியன் மக்...
Tags: