பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது!

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது!

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது!

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து மொத்தம் 17 பேர் அர்ஜூனா விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


கடந்த ஆண்டு பிரேசிலில், பார்சிலோனாவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும். தங்கப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்து தந்த மாரியப்பன் தங்கவேலுக்கு தற்போது அர்ஜூனா விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த மாரியப்பன் தங்கவேல்:

இவர் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா. இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார்.

விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். மாரியப்பனின் சாதனைகளை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசுக்கு மாரியப்பன்னுக்கு அர்ஜூனா விருது அறிவித்துள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: