கீழடி அகழாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!

மதுரை அருகே உள்ள கீழடியில் ‘வைகை நதி நாகரிகம்’ குறித்து 2013-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் நடந்த பல அரசியல் சிக்கல்களால் அவர் மாற்றப்பட்டார். கீழடி அகழ்வாராய்ச்சியின் முழுமையான அறிக்கையையும் அவர் தயாரிக்கக் கூடாது என உத்தரவு வந்தது.

இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் பிரபாகர் பாண்டியன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை வந்தபோது, மத்திய தொல்லியல் துறை சார்பாக ஏழு பக்க அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

அதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் 2300 ஆண்டுகள் பழைமையானது என்று தெரிவித்துள்ளது.

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, அமர்நாத் ராமகிருஷ்ணனை, முழு அறிக்கையையும் ஏழு மாதங்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும், மத்திய தொல்லியல் துறை கீழடியில் இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியின் அறிக்கைகளைத் தமிழக தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: