கடற்கரை (பீச்) கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்றும் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லையே – வீராங்கனை அந்தோணியம்மாள் ஆதங்கம்!

கடற்கரை (பீச்) கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்றும் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லையே - வீராங்கனை அந்தோணியம்மாள் ஆதங்கம்!

கடற்கரை (பீச்) கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்றும் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லையே – வீராங்கனை அந்தோணியம்மாள் ஆதங்கம்!

பீச் கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்றும் அரசு கண்டுகொள்ளவில்லை என்று வீராங்கனை அந்தோணியம்மாள் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள மொரீசியஸ் தீவில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் முதலாவது சர்வதேச கடற்கரை கபடி போட்டி நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டனர். இந்திய அணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த அந்தோணியம்மாள் (24) இடம் பெற்று விளையாடினார். இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 56-25 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீராங்கனை அந்தோணியம்மாள் விழுப்புரம் மாவட்டம் சோழபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர். தந்தை சவரிமுத்து பால்வியாபாரம் செய்து வருகிறார். மதுரை யாதவா கல்லூரியில் பிஏ தமிழ் 2ம் ஆண்டு படித்து வரும் அந்தோணியம்மாள் சிறு வயதிலிருந்தே கபடி போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள், விருதுகளை பெற்றுள்ளார்.

நேற்று சொந்த ஊருக்கு திரும்பிய அந்தோணியம்மாளுக்கு விழுப்புரத்தில் பகல் 11.45 மணியளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சொந்த ஊரான சோழபாண்டியபுரத்துக்கு அழைத்து சென்றனர். இது குறித்து அந்தோணியம்மாள் கூறுகையில், என்னைப்போன்று பல அந்தோணியம்மாள்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழக அரசு ரூ.2 கோடி ரொக்கப்பரிசு வழங்கி ஊக்குவித்தது. அதனால்தான் எனக்குள்ளும் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆசையும், உந்துதலும் வந்தது. இதற்கு முன்பு வியட்நாம் கடற்கரை கபடி போட்டியில் இந்திய அணி சார்பில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தோம். தற்போது 2வது முறையாக கடற்கரை (பீச்) கபடி போட்டியிலும் தங்கம் வென்றுள்ளோம். 2 முறை தங்கம் வென்றும் தமிழக அரசு என்னை கண்டு கொள்ளவே இல்லை. என்னைப் போன்ற ஏழை விளையாட்டு வீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி செய்து ஊக்குவிக்க வேண்டும். உலகக்கோப்பை போட்டியிலும் தங்கம் வெல்ல வேண்டும் என்பது எனது லட்சியம், என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: