300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

300 years old statuesகாட்டுமன்னார்கோவில் அருகே கோயில் குளம் தூர்வாரும் பணியின்போது 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 ஐம்பொன் சிலைகள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருமூலஸ்தானம் கிராமத்திலுள்ள கைலாசநாதர் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. அப்போது குளத்தில் இரும்பு பொருள் தென்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து கிராம நிர்வாகிகள் வந்து பார்த்தனர்.

குளத்தில் இருந்து பீடம் உடைந்த நிலையில் ஒரு நடராஜர் சிலை, 2 அம்மன் சிலைகள், ஒரு பெருமாள் சிலை என 4 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து வட்டாட்சியர், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உடனே தகவல் அளிக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட சிலைகள் 200 கிலோ எடை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிலைகள் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்டெடுக்கப்பட்ட சிலைகளுக்கு ஊர் மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வழிபட்டனர். பின்னர், அங்கிருந்து தொல்லியல் துறையினரின் ஆராய்ச்சிக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மிகவும் பழமை வாய்ந்த சிலை கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால கற்சிலைகள் கண்... 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால கற் சிலைகள் கண்டெடுப்பு! திருவள்ளூர் அருகே பள்ளி வளாகத்தில் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த 4 சோழர் கால கற்சிலைகள் கண்...
ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட பழமையான பிரித்தியங்கரா... ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை மீட்பு! சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திர கபூரால் கடத்தப்பட்டு, ஆஸ்திரேலியாவில் வ...
திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோவில் சிற்ப க... திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோவில் சிற்ப கலை! கிருஷ்ணாபுரம் திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலிக்கு 12கி.மீ தொலைவில் குமார ...
வெளிநாடுகளில் தமிழக சிலைகள் மீட்கும் முயற்சியில் க... வெளிநாடுகளில் தமிழக சிலைகள் மீட்கும் முயற்சியில் போலீஸ் தீவிரம்! சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரால், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள...
Tags: