சேலம் மாவட்டத்தில் 14, 15ம் நுாற்றாண்டு காலத்து 9 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டத்தில் 14, 15ம் நுாற்றாண்டு காலத்து 9 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டத்தில் 14, 15ம் நுாற்றாண்டு காலத்து 9 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பூதேவி, ஸ்ரீதேவி சமேத நயினபூர்ண நாராயண பெருமாள் மற்றும் தையல்நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. 1917ல் நடந்த கும்பாபிஷேக விழாவுக்கு பின், பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. சிவன் மற்றும் பெருமாள் கோவிலை புனரமைப்பு செய்வதில் பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெருமாள் கோவிலின் வடகிழக்கு திசையில், ஆஞ்சநேயர் சிலை அமைக்க பள்ளம் தோண்டினர். 5 அடி ஆழத்தில் பலகை கற்கள் வரிசையாகவும், சிறிய வழிப்பாதை இருந்ததை பார்த்தனர். அந்த பாதையில் இறங்கி பார்த்த போது 8 அடி அகலம் 8 அடி நீளத்தில், சதுர வடிவில் நிலவரை சுரங்கம் இருந்தது. அந்த சுரங்கத்தினுள் 3 அடி உயரத்தில் பெருமாள், 2.75 அடி உயரம் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளும், 2 அடி உயரத்தில் விஷ்ணு, லட்சுமி, கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், பத்மாவதி தாயார் மற்றும் திருமங்கை மன்னர் ஆழ்வார் என, 9 ஐம்பொன் உலோக சிலைகள் வரிசையாக இருந்தன. ஆத்துார் வருவாய் துறை அதிகாரிகள், நிலவரை சுரங்கத்தில் இருந்த ஒன்பது ஐம்பொன் உலோக சிலைகளை மீட்டனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இதுகுறித்து ஊர் மக்கள், இந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் நேரில் வந்து ஜேசிபி மூலம் நிலவறையை தோண்டும் நடவடிக் கையில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், நிலவரை சுரங்கத்தில் இருந்து முதன்முறையாக, உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 14, 15ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசு மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில், கலைநயமிக்க உலோக சிலைகளை செய்து நிலவரை சுரங்கத்தில் பாதுகாத்து வந்துள்ளனர். பெருமாள் கோவிலில் ராமானுஜர் சிலை இருக்கும். இங்கு, 12 ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை மன்னர் ஆழ்வார் சிலை உள்ளது அரியதாகும், இவ்வாறு அதே பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால கற்சிலைகள் கண்... 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால கற் சிலைகள் கண்டெடுப்பு! திருவள்ளூர் அருகே பள்ளி வளாகத்தில் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த 4 சோழர் கால கற்சிலைகள் கண்...
ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சுவாமி சிலைகள் சிங்கப... தமிழகத்தில் இருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தப்பட்டு, அமெரிக்கா, சிங்கப்பூர் உட்பட, பல நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளத...
ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட பழமையான பிரித்தியங்கரா... ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை மீட்பு! சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திர கபூரால் கடத்தப்பட்டு, ஆஸ்திரேலியாவில் வ...
வெளிநாடுகளில் தமிழக சிலைகள் மீட்கும் முயற்சியில் க... வெளிநாடுகளில் தமிழக சிலைகள் மீட்கும் முயற்சியில் போலீஸ் தீவிரம்! சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரால், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள...
Tags: 
%d bloggers like this: