பெருகவாழ்ந்தான் கோவிலில் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஐம்பொன் சுவாமி சிலை கண்டுபிடிப்பு!

பெருகவாழ்ந்தான் கோவிலில் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஐம்பொன் சுவாமி சிலை கண்டுபிடிப்பு!

பெருகவாழ்ந்தான் கோவிலில் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஐம்பொன் சுவாமி சிலை கண்டுபிடிப்பு!

திருவாரூர், மன்னார்குடி அருகே, கோவில் திருப்பணியின் போது, ஐம்பொன் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, பெருகவாழ்ந்தான் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சேதமடைந்ததால், 10 ஆண்டுகளாக வழிபாடுகள் ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில், அறநிலையத் துறை நிதியுதவியுடன், இக்கோவில் திருப்பணியை, கிராம மக்கள் துவக்கி உள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


நேற்று முன்தினம் (30.6.2017) இரவு, 7:00 மணிக்கு, மீனாட்சி அம்மன் கர்ப்பகிரகத்தில் பணி நடந்தது. அம்மனுக்கு எதிரே உள்ள சுவரை பழுது பார்க்கும் போது, சத்தம் கேட்டுள்ளது. சுவரை தோண்டி பார்த்த போது, சுவாமி சிலை இருப்பது தெரிய வந்தது. உடனடியாக, அறங்காவல் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின், சிலையை, அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இச்சிலை, 1.5 அடி உயரமுடைய ஐம்பொன்னால் ஆன, சந்திரசேகர சுவாமி சிலை என, உறுதி செய்யப்பட்டது. பின், சுவாமி சிலை, அக்கிராமத்தில் உள்ள, பெருமாள் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

‘பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்... 'பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்' - தொல்லியல் அறிஞர்கள் வேதனை! 'பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பார...
2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் வரலாறு!... 2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் வரலாறு! திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தி...
ஆலங்குடி அருகே பழமையான குமிழிமடை கல்வெட்டு கண்டுபி... ஆலங்குடி அருகே பழமையான குமிழிமடை கல்வெட்டு கண்டுபிடிப்பு! புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் புதுக்கோட்டை சமஸ்தான...
செஞ்சிக் கோட்டை ராஜா தேசிங்கு வரலாறு !... செஞ்சிக் கோட்டை ராஜா தேசிங்கு வரலாறு ! செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புர...
Tags: