சிவகங்கை மாவட்டம் கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கியது!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கியது!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கியது!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வராய்ச்சி பணிகள் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தலைமையில் துவங்கியது. கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜுன் மாதம் வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில், பண்டைய வணிக நகரத்தின் அடையாளத்தை தேடி மத்திய தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆராய்ச்சியை துவங்கியது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


2015 நவம்பர் வரை நடைபெற்ற அகழாராய்ச்சியில், வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று உறைகிணறுகள், 350 பானை ஓடுகள், 32 பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன.

அதன்பின், 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி துவங்கியது. இதில், மருத்துவ குடுவைகள், பழங்கால கிணறு, தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு வரலாற்று ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.

இரண்டு கட்ட அகழாய்வின் முடிவில் கிடைத்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை ஆய்விற்கு உட்படுத்தியபோது, அவையனைத்தும் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்தவை என்பது உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின், இப்பொழுது 3ம் கட்ட அகழ்வாராய்ச்சியை புதிதாக பதவியேற்றுள்ள கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தலைமையில் துவங்கியது. ஏற்கனவே, அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்தையொட்டி, 50 மீட்டர் தொலைவில் ராமதாஸ் என்வரின் தென்னந்தோப்பில் பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக, ஆறு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும் எனவும், கிடைக்கும் பொருட்களை வைத்து அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வு மூன்று ஆண்டுகள் த... கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வு மூன்று ஆண்டுகள் தொய்வின்றி நடக்கும் : சிவகங்கை அல்லது சென்னையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்! மத்திய அமைச்சர் மகேஷ...
கீழடி அகழாய்வில் 6,000 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு... கீழடி அகழாய்வில் 6,000 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன - உயர் நீதிமன்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது! மதுரை அருகே, கீழடி அகழாய்வில், 6,018 பழங்க...
கீழடி அகழாய்வை இழுத்து மூட திட்டமா? பொறுப்பாளர் தி... கீழடி அகழாய்வை இழுத்து மூட திட்டமா? பொறுப்பாளர் திரு. அமர்நாத் மற்றும் குழுவினர் 25 பேரையும் பணியிடை மாற்றத்திற்க்கு மத்திய அரசுக்கு அவசரம் ஏன்? மது...
கீழடி அகழாய்வு திட்டத்தை தள்ளிப்போட மறைமுக திட்டமா... கீழடி அகழாய்வு திட்டத்தை தள்ளிப்போட மறைமுக திட்டமா! கீழடி அகழாய்வுக்கான நிதியை, மத்திய தொல்லியல் துறை இன்னும் ஒதுக்காததால், அகழாய்வு, இம்மாதம் துவங்...
Tags: