அகழ்வாராய்ச்சியில் அரசியல் தலையீடு உள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர் ஆதங்கம்!

அகழ்வாராய்ச்சியில் அரசியல் தலையீடு உள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர் ஆதங்கம்!

அகழ்வாராய்ச்சியில் அரசியல் தலையீடு உள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர் ஆதங்கம்!

‘அகழ்வாராய்ச்சி முடிவுகளில், அரசியல்வாதிகள் தலையிட்டு, அவர்களுக்கு சாதகமாக வெளியிட சொல்கின்றனர்,” என, தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் பேசினார்.

‘மதுரை கருத்துப் பட்டறை’ சார்பில் நடந்த ‘தொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள்’ கருத்தரங்கில், ‘சிந்துவெளி முதல் கீழடி வரை’ என்ற, தலைப்பில் அவர் பேசியதாவது:


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சிவகங்கை மாவட்டம், கீழடியில், 1976ம் ஆண்டிலேயே, தொல்லியல் பொருட்களை கண்டறிந்தோம். அப்போது கறுப்பு, சிவப்பு பானைகள் அங்கே கிடைத்தன. சமீபத்தில் கீழடியில் கிடைத்த கட்டடங்கள், வீடு போல இல்லை. அது துணிகளுக்கு சாயம் ஏற்றும் சாயப்பட்டறை போல தான் இருக்கிறது. அந்த கட்டடத்திற்குள் சாயக் குழாய்கள், சாயம் கலக்கும் பானைகள் இருப்பதே அதற்கு சான்று. ஏழாம் நுாற்றாண்டில் அப்பகுதியில் ஓடிய கிளை ஆற்றில் வெள்ளம் வந்ததால், அந்த பட்டறை அழிந்து போயிருக்கலாம். அகழ்வாராய்ச்சி முடிவுகளில், அரசியல்வாதிகள் தலையிட்டு, அவர்களுக்கு சாதகமாக வெளியிட சொல்லி வற்புறுத்துகிறார்கள். எதை செய்தாலும் தங்களது பெயர் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதனால் தான், இத்தனை ஆண்டுகளாக கீழடியை நாம் மறந்து விட்டோம். தற்போது ஆய்வுக்காக வந்திருக்கும் அதிகாரிகள், மக்கள் கருத்துக்களை மதிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வு மூன்று ஆண்டுகள் த... கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வு மூன்று ஆண்டுகள் தொய்வின்றி நடக்கும் : சிவகங்கை அல்லது சென்னையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்! மத்திய அமைச்சர் மகேஷ...
ஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன்? – தம... ஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன்? - தமிழர் வரலாற்றை திசை திருப்பும் மர்மம்! பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளும் மிக முக்கிய புதையலா...
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள த... கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு - அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்! கீழடி அ...
உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்பதற்கு பட்டறைப் பெ... உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்பதற்கு பட்டறைப் பெரும்புதூர்தூரில் தற்போது (2016) நடந்து வரும் அகழ்வாராய்ச்சி மேலும் ஓர் ஆதாரம்! பட்டறைப் பெரும்புதூ...
Tags: