ஆந்திராவுக்கு சென்ற 700 தமிழர்களின் நிலை என்ன?

ஆந்திராவுக்கு சென்ற 700 தமிழர்களின் நிலை என்ன?

ஆந்திராவுக்கு சென்ற 700 தமிழர்களின் நிலை என்ன?

கல்வராயன் மலையில் இருந்து, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு, கூலி வேலைக்கு சென்ற, 2,010 பேர், மூன்று மாதங்களாகியும் வீடு திரும்பவில்லை. இதில், 700 பேர் ஆந்திராவுக்கு சென்று, மாயமானதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரியில், சேலம் மற்றும் கருமந்துறை இடைத்தரகர்கள் மூலம், ஆந்திராவுக்கு, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுாரைச் சேர்ந்த, 170 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், சேலம், கல்வராயன்மலை, கீழ்நாடு ஊராட்சியைச் சேர்ந்த ஐவர், பிப்ரவரி-18ல், ஆந்திரா, கடப்பா, ஒண்டிமிட்டா ஏரியில், மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். 27 பேர் வனத்துறையினரிடம் பிடிபட்டனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


கிராங்காடு முருகேசன் என்பவர் மட்டும் தப்பி வந்தார். மற்ற, 137 பேரின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இதையடுத்து, கல்வராயன்மலை, பச்சமலையைச் சேர்ந்த, வெளிமாநில வேலைக்கு சென்ற மலைவாழ் மக்களின் பெயர், படம், அவர்கள் தொழில், இருப்பிட முகவரி உள்ளிட்ட விபரங்கள் குறித்து அறிக்கை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆத்துார், ஆர்.டி.ஓ., செல்வன் தலைமையில், தாசில்தார்கள், ஆர்.ஐ., க்கள், வி.ஏ.ஓ., க்கள் உட்பட, 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள், தனிப்படை போலீசார், மலை கிராமங்களில் விசாரிக்கின்றனர். முதல் கட்ட விசாரணையில், கல்வராயன் மலையில், மேல்நாடு – 18, கீழ்நாடு – 23, வடக்குநாடு – 35, தெற்கு நாடு – 23 என, 99 மலை கிராமங்கள் உள்ளன.

இவற்றில், ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு, குடும்பத்துடன் மற்றும் தனியாக என, 2,010 பேர் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். இவர்கள், மூன்று மாதங்களுக்கும் மேலாகியும் வீடு திரும்பவில்லை. ஆந்திராவுக்கு மட்டும், 700 பேர் தனியாக சென்றுள்ளனர். அவர்களது நிலை என்னவென்று சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கே தெரியவில்லை. பலரது வீடுகள் பூட்டி கிடக்கின்றன.

“கல்வராயன் மலையில் மட்டும், 15 இடைத்தரகர்கள், ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட ஆட்கள் அனுப்பியது தெரிந்தது. தற்போது, அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். குடும்பத்தினருடன் சென்றவர்கள், கர்நாடகா, மைசூரு, கேரளாவுக்கு மிளகு பறிக்கும் வேலைக்கு சென்று உள்ளனர்.

இறந்த, ஐந்து பேருடன் சென்ற, 64 பேர் எங்கு உள்ளனர் என தெரியாததால், தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இம்மாத இறுதிக்குள், விசாரணை அறிக்கை, தமிழக அரசிடம் வழங்கப்படும்”. இவ்வாறு வருவாய் துறை அலுவலர்கள் கூறினார்கள்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: