திருநங்கைகளுக்கான `மிஸ் இந்தியா’ போட்டியில் `டாப் மாடல் ஆஃப் இந்தியா’ பட்டம் வென்ற தமிழகப் பெண்!

திருநங்கைகளுக்கான `மிஸ் இந்தியா' போட்டியில் `டாப் மாடல் ஆஃப் இந்தியா' பட்டம் வென்ற தமிழகப் பெண்!

திருநங்கைகளுக்கான `மிஸ் இந்தியா’ போட்டியில் `டாப் மாடல் ஆஃப் இந்தியா’ பட்டம் வென்ற தமிழகப் பெண்!

மும்பையில் திருநங்கைகளுக்காக நடந்த `மிஸ் இந்தியா’ போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நமீதா அம்மு, ரன்னர்-அப் பட்டம் வென்றதுடன், `டாப் மாடல் ஆஃப் இந்தியா’ பட்டத்தையும் வாகை சூடியுள்ளார்.

இதுகுறித்து நமீதா அம்மு கூறியதாவது, “ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. திருநங்கையாக இருப்பதால் நிறைய இடங்களில் எனக்கான அடையாளம் மறுக்கப்பட்டிருக்கு. இப்போ, `டாப் மாடல் ஆஃப் இந்தியா’னு சொல்றதைக் கேட்கறப்போ, சந்தோஷத்துல கண்ணீர் வருது. ஒரு முழுமையான பெண்ணாக உணர்கிறேன். இந்தப் போட்டியில் டிரடிஷனல், காக்டெயில், ஈவ்னிங் வியர் என 3 சுற்றுகளாகப் போட்டி நடந்துச்சு. 3 சுற்றிலுமே என் உடல்வாகுக்குத் தகுந்த ஆடைகளைத் தனித்துவமா தேர்வு செஞ்சு களமிறங்கினேன். அதுதான் வெற்றிக்கான காரணம். இந்த வெற்றி மூலமாக, ஆஸ்திரேலியாவில் திருநங்கைகளுக்காக நடக்கும் உலக அழகிப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கேன். அதிலும் வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கு. இதில் கிடைக்கும் பரிசுத் தொகையைப் படிப்பைப் பாதியில் நிறுத்தியிருக்கும் திருநங்கைகள் மீண்டும் தொடர பயன்படுத்தலாம்னு இருக்கேன்.

இந்த `டாப் மாடல் ஆஃப் இந்தியா’வை எனக்கான வெற்றியாக மட்டும் பார்க்கலை. புறக்கணிக்கப்படும் ஒவ்வொரு திருநங்கைகளுக்கான வெற்றியாப் பார்க்கிறேன்” என நெகிழ்ச்சியாகச் சொல்கிறார் நமீதா.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

வழக்குரைஞராகப் பதிவு செய்த முதல் திருநங்கை சத்யஸ்ர... வழக்குரைஞராகப் பதிவு செய்த முதல் திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா! தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ள திருநங்கை சத்...
Tamil transgender rejected by Air Indiajob, seeks ... Tamil transgender rejected by Air Indiajob, seeks ‘mercy killing’ nod from President! A transgender candidate was denied a job as a cabin crew by Ai...
அரசு உயர் பதவிகளிலும் கோலோச்சும் தமிழகத்து திருநங்... அரசு உயர் பதவிகளிலும் கோலோச்சும் தமிழகத்து திருநங்கைகள்! 'பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுதல் தவறு' என்பார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் இவர்களைப் பார்க...
எலிசபெத் மகாராணியிடம் விருது பெறும் இலங்கைப் பெண்!... எலிசபெத் மகாராணியிடம் விருது பெறும் இலங்கைப் பெண்! எலிசபெத் மகாராணியிடம் இருந்து விருது பெற இலங்கைப் பெண்ணான பாக்கியா விஜயவர்த்த தேர்வு செய்யப்பட்டு...
Tags: