ஆந்திராவில் மேலும் ஒரு தமிழர் சுட்டுக் கொலை! மூன்று பேர் படுகாயம்!

ஆந்திராவில் மேலும் ஒரு தமிழர் சுட்டுக் கொலை! மூன்று பேர் படுகாயம்!

ஆந்திராவில் மேலும் ஒரு தமிழர் சுட்டுக் கொலை! மூன்று பேர் படுகாயம்!

செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆந்திர காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர வனப் பகுதியில் செம்மரம் வெட்டுவதாக தமிழகத்தை சேர்ந்தவர்களை ஆந்திர காவல்துறை கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், கடப்பா மாவட்டத்தில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஏர்பேடு என்ற வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டிக் கடத்துவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆந்திர மாவட்ட செம்மரம் கடத்தல் தடுப்பு காவல் துறையினர் அந்த வனப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

அப்போது காடுகளுக்குள் இருந்தவர்களை காவல் துறையினர் சரணடைய கோரியதாகவும், ஆனால், கடத்தல் காரர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசி எதிர்தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்தது செம்மரம் கடத்தல்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில், தமிழகத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த காமராஜ் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஆந்திர காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ஆந்திராவுக்கு சென்ற 700 தமிழர்களின் நிலை என்ன?... ஆந்திராவுக்கு சென்ற 700 தமிழர்களின் நிலை என்ன? கல்வராயன் மலையில் இருந்து, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு, கூலி வேலைக்கு சென்ற, 2,010 பேர், ம...
செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 80 தமிழர்கள் திருப்பதி... செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 80 தமிழர்கள் திருப்பதி அருகே கைது! செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி லாரியில் சென்ற 3 பட்டதாரி இளைஞர்கள் உள்பட 80 தமிழர்க...
தமிழர்கள் தண்டனைக்குட்படுத்தும், செம்மர கடத்தலும்,... செம்மர கடத்தலும், சர்வதேச வலைப் பின்னலும்! உலகில் எங்கும் கிடைக்காத அபூர்வ ரக மரவகையைச் சேர்ந்தது செம்மரம். ஆந்திராவின் சித்தூர், கடப்பா, நெல்லூர்,...
கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்... கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்கொலை! இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் நலனுக்காக போராடி வந்த நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழ...
Tags: 
%d bloggers like this: