ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடம்!

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடம்!

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களில், இந்திய அளவில் தமிழக வீரர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்களை வென்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம். அந்த 69-பதக்கங்களை 184-வீரர்கள் வென்றனர். அதாவது அணியாக விளையாடிய போட்டிகளில், ஒவ்வொருவரையும் தனித்தனி வெற்றியாளராகக் கருதினால், மொத்தம் 184 பேர் பதக்கம் வென்றுள்ளனர்.

ஹாக்கி, கபடி, செபக் டெக்ரா, தொடர் ஓட்டம் போன்ற விளையாட்டுகளில் நிறைய வீரர்கள் பங்கேற்பதால், பதக்கம் வென்ற வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 4X400 தொடர் ஓட்டத்தில் தமிழக வீரர்கள் 2 பேர் பதக்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிக்காகப் பதக்கம் வென்ற 3 பேருமே தமிழக வீரர்கள் – சத்யன், சரத் கமல், அமல்ராஜ். அதேபோல், ஸ்குவாஷ் பெண்கள் அணிப் பிரிவில் பதக்கம் வென்ற நால்வரில் 3 வீராங்கனைகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்லாமல், ஸ்குவாஷ் ஒற்றையர், பாய்மரப் படகோட்டுதல், டென்னிஸ் போன்ற பிரிவுகளிலும் தமிழக வீரர்கள் வெற்றி பெற்று அசத்தினர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

மத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த ... மத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல்! - சென்னைக்கு 14-வது இடம்! மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்களின் பட்டியலை மத்திய அர...
ஆசியாவின் சிறந்த பகுதியாக தேர்வு செய்யப்பட்ட இலங்க... ஆசியாவின் சிறந்த பகுதியாக தேர்வு செய்யப்பட்ட இலங்கையின் தமிழ் பிரதேசம்! ஆசியாவின் சிறந்த 10 பயண இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது. மட்டக்களப்ப...
இதுவரை அறிந்திராத `ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: ... இதுவரை அறிந்திராத `ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம்! உலகறிந்த மொழிகளில் உள்ள நூல்களை எல்லாம் தன்னகத்தே கொண...
தடுப்பணை பல கட்டிய கொங்கு மண்டலம் செப்பேடுகள் தரும... தடுப்பணை பல கட்டிய கொங்கு மண்டலம் செப்பேடுகள் தரும் அரிய தகவல்! வரலாறு காணாத வகையில், காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு. உபரி நீரைச் சேமிக்க வழியில்லை...
Tags: 
%d bloggers like this: