டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரத நாட்டிய வகுப்புகள்!

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரத நாட்டிய வகுப்புகள்!

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரத நாட்டிய வகுப்புகள்!

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரத நாட்டிய வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை, தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

டெல்லியில் பல லட்சங்கள் என்ற எண்ணிக்கையில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தை விட்டு வெகுதூரம் வசிக்கும் இவர்களின் குழந்தைகளுக்கு மொழி ஒரு பெரும் பிரச்சனையாகி விடுகிறது. டெல்லியில் இந்தி பேசப்படுவதால் அவர்கள், தம் தாய் மொழியான தமிழை மறந்து விடுவது அதிகமாகி வருகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இதேபோல், தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான தமிழ் இசை மற்றும் பரத நாட்டியம் கற்கும் வாய்ப்புகளும் டெல்லி தமிழர்களுக்கு கிடைப்பதில்லை. இவை டெல்லியில் பெரும் வியாபாரமாகி அதற்கான செலவை சாதாரண குடும்பங்களால் சமாளிக்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து இதற்கான இலவசப் பயிற்சி அளிக்க டெல்லியின் தமிழ்நாடு இல்ல அதிகாரிகளின் யோசனையில், தமிழக அரசு ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது.

இதில், டெல்லியின் சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தில் தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் முடிந்து நேற்று அதன் தொடக்க விழா நடைபெற்றது. தமிழக அமைச்சர் க. பாண்டியராஜன் தொடங்கி வைக்க, டெல்லிக்கான சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், ராஜேந்திரன், சந்திரகாசி, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உள்ளுறை ஆணையாளர் ஜஸ்பீர் சிங் பஜாஜ், முதன்மை உள்ளுறை ஆணையாளர் நா .முருகானந்தம் மற்றும் கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் குணசேகரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

மூன்று பயிற்சிகளும் தனித்தனியாக வாரத்தில் இருமுறை நடைபெற உள்ளது. ஞாயிறு மட்டும் காலையிலும், மற்ற நாட்களில் மாலையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 80 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் தமிழ் மொழி கற்க பாதிக்கும் அதிகமானோர் ஆர்வம் காட்டியுள்ளனர். இதன் எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ இணையதளத்திடம் நா.முருகாணந்தம் கூறும்போது, ‘ஒரு வருடப் பயிற்சியில் இறுதியில் அனைவருக்கும் தேர்வு நடத்தி தமிழக அரசின் சான்றிதழ் அளிக்கப்படும். இதற்காக, தஞ்சை தமிழ் பல்கலைகழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்தார்.

தமிழ் நாடு இல்லத்தின் இந்த புதிய முயற்சி, டெல்லி வாழ் தமிழர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: