தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்! – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி!

தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்! - தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி!

தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்! – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி!

தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.சி.ஏ.என்.என் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சமிரான் குப்தா இந்த தகவலை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று 13.08.2018 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடிசா, பெங்காலி, தேவநாகரி, குஜராத்தி, குர்முகி போன்ற மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து பல்வேறு பிராந்திய மொழிகளில் இணையதளங்களுக்கு பெயரிடும் நடவடிக்கை விரைவில் ஏற்படுத்தப்படும்.

இதேவேளை தற்போது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து இணையதள முகவரியை பெறும் வசதி மட்டுமே உள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட நடவடிக்கையின் மூலம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இணையத்தளங்களின் பெயர்களை தமிழிலேயே தட்டச்சு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் தெரியாத மக்களும் இணையத்தளத்தை பாவிக்கக் கூடிய வகையிலேயே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அண்மையில் கூகுளின் உத்தியோகபூர்வ மொழிகளில் தமிழும் இணைக்கப்பட்டு தமிழுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடப்பட்டது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

திருக்குறளுக்கு உலகப்புத்தக அங்கீகாரம் பெற முயற்சி... திருக்குறளுக்கு உலகப்புத்தக அங்கீகாரம் பெற முயற்சி - அமைச்சர் பாண்டியராஜன்! திருக்குறளுக்கு, உலக புத்தகம் என்ற அங்கீகாரத்தை பெற முயற்சி எடுக்கப்பட்ட...
தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீ... தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்! தஞ்சாவூர் கலைத்தட்டுக் கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது....
​ஆப்பிள் நிறுவனத்தின் விருது வென்று அசத்திய தமிழக ... ஆப்பிள் நிறுவனத்தின் விருது வென்று அசத்திய தமிழக இளைஞர்! அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான ஆப்பிள் நிறுவனம் சார்பில் அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடை...
ஐ.நாவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்: 50 நாடுகளி... ஐ.நாவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்: 50 நாடுகளின் பட்டியலில்! பிளாஸ்ட்டிக் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் 50 உலக நாடுகளின் பட்டியலில் இ...
Tags: