`தமிழ் மொழியால் தேசம் பெருமை கொள்கிறது’ – மான் கி பாத் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த பிரதமர் மோடி!

`தமிழ் மொழியால் தேசம் பெருமை கொள்கிறது' - மான் கி பாத் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த பிரதமர் மோடி!

`தமிழ் மொழியால் தேசம் பெருமை கொள்கிறது’ – மான் கி பாத் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த பிரதமர் மோடி!

இயற்கை சீற்றங்கள் பேரழிவை ஏற்படுத்தினாலும், நாம் ஒற்றுமையாக இருக்க அந்த நிகழ்வுகள் நமக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, “உலகிலேயே மிகத் தொன்மையான மொழி தமிழ். உலக மக்களால் பழைமையான மொழியாகத் தமிழ் அறியப்படுவதில் இந்தியா பெருமை கொள்கிறது.

அதேபோல் சமஸ்கிருதம் இந்தியாவின் உயர்ந்த மொழி. அது நமது கலாச்சாரத்துடன் இணைந்துள்ளது. ஆசிரியர் தினம் கொண்டாடப்படவுள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துகள். பெற்றோருக்களுக்குப் பின் நம்மைப் புரிந்து கொள்பவர்கள் ஆசிரியர்களே.கேரளாவில் நிலவி வரும் இந்த துயரமான நேரத்தில் அவர்களுக்காக நாம் அனைவரும் உள்ளோம்.

கடவுளின் தேசத்துக்கு 125 கோடி மக்களும் உதவி புரிந்து வருகிறோம். இயற்கை சீற்றங்கள் பேரழிவை ஏற்படுத்தினாலும், நாம் ஒற்றுமையாக இருக்க இந்த நிகழ்வுகள் நமக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. நல்ல, திறமையான நிர்வாகத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயை என்றும் நாடு நினைவில் வைத்துக் கொள்ளும். அவர் சிறந்த தேச பக்தர் மட்டுமின்றி, நாட்டுக்கு உண்மையான பங்களிப்பை அளித்தவர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: