இது இந்தியா, ‘இந்தி’யா அல்ல : அமித்ஷாவின் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு!

1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் இந்திய நாட்டின் அலுவல் மொழியாக இந்தி மொழி அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இந்தி இலக்கியத்தில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

இந்தி தினம் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து, ஒரே நாடு, ஒரே மொழி என்ற தலைப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு, ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு, இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு தென் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் அடையாளம் அதை விட்டுவிட்டு ஒரே மொழியை திணிக்க முயற்சிப்பது இந்தியாவின் அடையாளத்தை அழிப்பதற்கு முயற்சிப்பதாகும் என பலரும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: