இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது – மத்திய அரசு அறிவிப்பு!

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு!

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது – மத்திய அரசு அறிவிப்பு!

2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருதும் நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கும் பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முன்பாக பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதுண்டு. கடந்த 1954-ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு இன்று (25.1.2018) வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. இசைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும்விதமாக அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு!

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது – மத்திய அரசு அறிவிப்பு!

அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞரான விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ’தமிழ் நாட்டுப்புறக் கலைகளின் என்சைக்ளோபீடியா’ என்று விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் புகழப்பட்டுள்ளார். பாரம்பர்யமான தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனக் கலைகளை ஆவணப்படுத்துவதற்காகத் தனது வாழ்நாளைச் செலவிட்டார் விஜயலட்சுமி, நவநீத கிருஷ்ணன். இவரின் சேவையைப் பாராட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மதுரை காமராசர் பல்கலையின் நாட்டுப்புறவியல் துறையின் முன்னாள் பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை பயன்படுத்தி புத்தாக்க முறையில் சாலை அமைத்து அதற்கு காப்புரிமை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ராஜகோபாலன் வாசுதேவனுக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: