கீழடியை வஞ்சிக்கும் தொல்லியல் துறை : அடுத்த அகழாய்வுக்கு அனுமதி மறுப்பா?

Archaeological Survey of Indiaஇந்திய தொல்லியல் துறையால், கடந்த ஆண்டு அகழாய்வு செய்யப்பட்ட, நான்கு இடங்களில், கீழடிக்கு மட்டும், அடுத்த அகழாய்வுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் அனுமதி பெற, தமிழக – எம்.பி.,க்களும், மத்திய அமைச்சர்களும் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொல்லியல் சான்றுகள் இதுகுறித்து, தொல்லியல் அறிஞர்கள் கூறியதாவது: நிலம், நீருக்கடியில் உள்ள வரலாற்று சான்றுகளை சேகரிப்பது மற்றும் புராதன சின்னங்களை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளை, இந்திய தொல்லியல் துறை செய்கிறது. தமிழகத்தில், காவேரிபூம்பட்டினம், உறையூர், கரூர், தாமிரபரணி ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில், தொல்லியல் சான்றுகள் நிறைய கிடைத்தும், இந்திய தொல்லியல் துறை, இதுவரை முறையான அகழாய்வை செய்யவில்லை.

ஆனால், அதன் தென்னிந்திய கிளை, சிவகங்கை மாவட்டம், கீழடியில், 110 ஏக்கர் பரப்பளவை அடையாளம் கண்டு, அங்கு கடந்த ஆண்டு அகழாய்வை துவக்கியது; அது, இந்த ஆண்டும் தொடர்ந்தது.

அதில், சங்க கால, நகர நாகரிகத்திற்கான சான்றுகளாக, நீண்ட சுவர்கள், உறை கிணறு, ஊது உலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட முக்கிய சான்றுகள் கிடைத்தன.

அங்கு, மேலும் பல ஆண்டுகள் அகழாய்வு செய்தால், தமிழ் இலக்கியங்கள் கூறும் சமூக வாழ்க்கைக்கான சான்றுகள் கிடைக்கலாம். மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாதல், ரியல் எஸ்டேட் தொழில் போன்றவற்றால், தொல்லியல் பகுதிகள் அழிந்து வரும் நிலையில், கீழடியில் நல்ல நிலையில், தொல்லியல் பகுதி கிடைத்ததை, இந்திய தொல்லியல் துறை பயன்படுத்த வேண்டும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அவ்வாறு செய்யாமல், அகழாய்வு செய்யப்பட்ட வரை, அறிக்கை தயாரித்து வழங்க உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், இந்த ஆண்டு அகழாய்வு செய்யப்பட்ட குஜராத்தின், வாடு நகர், ராஜஸ்தானின், பிஞ்சூர், பீஹாரின், ஊரைன் ஆகிய இடங்களுக்கு, அடுத்த ஆண்டுக்கான அகழாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ‘காபா’வுக்கு மறுப்பு ‘காபா’ என்ற, மத்திய தொல்லியல் ஆலோசனை குழு, இந்திய தொல்லியல் துறைக்கு, தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அதில், தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர், இயக்குனர்களாக உள்ளனர்.

அவர்கள், கீழடியை நேரில் ஆய்வு செய்து, ஒப்புதல் வழங்குமாறு, முதன்மை இயக்குனருக்கு ஆலோசனை வழங்கினர். அவர், கீழடிக்கு வராமலேயே, அனுமதி மறுத்துள்ளார். இது, தென்னிந்திய வரலாற்றை இருட்டடிப்பு செய்யும், வட மாநிலத்தவர்களின் தாக்குதல்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட, இந்திய தொல்லியல் துறையின், பெங்களூரு கிளை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறுகையில், ”இப்போது அனுமதி கிடைத்தாலும், அகழாய்வு செய்ய ஆவலாக உள்ளோம்,” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: