கால்நடை இன பாதுகாவலர் விருது – தமிழகத்திலிருந்து இருவர் தேர்வு!

கால்நடை இன பாதுகாவலர் விருது - தமிழகத்திலிருந்து இருவர் தேர்வு!

கால்நடை இன பாதுகாவலர் விருது – தமிழகத்திலிருந்து இருவர் தேர்வு!

அழிந்து வரும் நாட்டு மாடு இனங்களை பேணிக் காக்கும் இருவருக்கு, தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தேசிய விலங்கின மரபு வள வாரியம், தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம், சேவா சமூக தொண்டு நிறுவனம் சார்பில், ஆண்டு தோறும், ‘கால்நடை இனப் பாதுகாவலர்’ விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு, தேசிய அளவில், பாரம்பரிய நாட்டு இன கால்நடைகளை பராமரித்து வளர்த்து வரும், 25 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அந்தந்த மாநில கால்நடை ஆராய்ச்சி நிலையங்கள் மூலம், விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுவர். அதன்படி, ஈரோடு மாவட்டம், பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம் சார்பில், நான்கு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். அதில், மலை எருமை இனமான, பர்கூர் எருமைகளை வளர்த்து வரும், பர்கூரைச் சேர்ந்த மாதையன், 75; ஆலம்பாடி இன மாடுகளை வளர்த்து வரும், மாதேஸ்வரன் மலையைச் சேர்ந்த சிவன்னதம்பிடி, 65, ஆகியோர் விருதை பெற்றனர். தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட, 25 பேரில், தமிழகத்தைச் சேர்ந்த இருவர், ஹரியானா மாநிலத்தில் நடந்த விழாவில் விருது பெற்றது குறிபிடத்தக்கது. இது குறித்து, பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலைய தலைவர், இவ்வாறு கூறினார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

விருது என்ற பெயரில் தந்தை செல்வநாயகத்தை அவமானப்படு... விருது என்ற பெயரில் தந்தை செல்வநாயகத்தை அவமானப்படுத்திய "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்"! கடந்த சனிக்கிழமை இரவு கல்லறையில் நீள் துயில் கொண்ட தந்தை செல்வ...
அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையி... அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையின் பெங்களுரின் மதிப்பு மிக்க தமிழ் உறுப்பினரான முனைவர் அசோக்-கிற்கு விருந்தளிக்கிறார்! அமெரிக்கவின...
கனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது !... கனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது ! கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ் கவிஞர் மற்றும் அறிஞரான வைத்தியர் சேரன் ருத்ரமூர்த்தி சர்வதேச கவிஞர் விருதுக...
தைரியத்திற்கான சர்வ தேச மகளிர் விருதை அமெரிக்க தூத... இலங்கை பெண்மணிக்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்! அமெரிக்க தூதரகம் வாழ்த்து! ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வருடா வருடம் மனித உரிமை, நீதி, ச...
Tags: