உடன் கட்டை ஏறும் சிற்பம் போர் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு!

உடன் கட்டை ஏறும் சிற்பம் போர் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு!

உடன் கட்டை ஏறும் சிற்பம் போர் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு!

ஆரணி அருகே, உடன் கட்டை ஏறும் சிற்பம் மற்றும் போர்வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வுக் குழுவினர், ஆரணி அடுத்த, பூசிமலை குப்பம் கிராமத்தில், 16-17ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால நடுகல்லை கண்டுபிடித்துள்ளனர். இவை, மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்டவை. வலது கையில், அம்பும், இடது கையில், வில்லும், முதுகில், அம்பரா தோனியும், காதுகளில் குண்டலும், கழுத்தணிகள், கால்தண்டை, இடுப்பில், ஒட்டியானம், கீழாடையுடன் இடுப்பின், பக்கவாட்டில் சிறிய கத்தியும், எதிரியுடன் சண்டையிடுவது போல் உள்ளது. தலையின், வலப்புறம் கொண்டையும், அகோர பார்வையுடன் காட்சியளிக்கிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


ஒரு போர்ப்படை தளபதியோ அல்லது வீரனோ, போரில் இறந்ததன் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் ஆகும். இதனருகே, உடன் கட்டை ஏறும் சிற்பம் உள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்டு, நாயக்கர்கள், ஆட்சி செய்த காலத்தில், போரில் கணவன் இறந்தால், மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததை, உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்த சிற்பம், விஜய நகர நாயக்கர்களின் பண்பாட்டு கலாச்சாரத்தினை பறைசாற்றுவதாக, அமைந்துள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ராஜராஜன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!... ராஜராஜன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு! ராஜராஜன் காலத்து, கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்கலை கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ...
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தூண் கல்வெட்டு கண்டு... ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு! போச்சம்பள்ளி அருகே, ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, கன்னட தூண் கல்வெட்டை, வரலாற்றுத்துறை ...
உத்திரமேரூரில் பலி வீரன் நவகண்டம் சிலை கண்டுபிடிப்... உத்திரமேரூரில் பலி வீரன் நவகண்டம் சிலை கண்டுபிடிப்பு! உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில், தன் தலையை தானே அறுத்து காணிக்கைக் கொடுக்கும், சோழர் கா...
தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு... தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு! கி.பி., 15ம் நுாற்றாண்டில், சேலத்தில் வெளியிட்ட நரசிம்மரின் உருவம், தம...
Tags: