காதணி அணியும் பழக்கம் தமிழர்களிடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது!

காதணி அணியும் பழக்கம் தமிழர்களிடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது!

காதணி அணியும் பழக்கம் தமிழர்களிடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காதணி அணியும் பழக்கம் தமிழர்களிடையே இருந்துள்ளது என ஓய்வு பெற்ற தொல்லியலாளர் சேரன் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் தமிழக தொல்லியல் துறைசார்பில் 4ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் களிமண் அச்சுகள், மருந்து கிண்ணங்கள், தங்கத்திலான காதணிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

நேற்று கீழடியில் சென்னை பல்கலை., ஓய்வு பெற்ற தொல்லியல் பேராசிரியர் சேரன் ஆய்வு மேற்கொண்டார்.அவர் கூறும் போது: தமிழகம் முழுவதும் தொல்லியல் ஆய்வு ஏராளமான இடங்களில் நடைபெற்று வருகின்றன. பண்டைய காலங்களில் காதணி அணியும் பழக்கம் இருந்துள்ளது. காதில் அணிகலன் அணிவதில் மருத்துவ ரீதியாக சரியானது என கூறப்படுகிறது.

பண்டைய காலத்தில் காதில் துளையிட்டு குச்சி, இலை உள்ளிட்டவை சொருகபட்டன. பின் தங்கத்திலான அணிகலன்கள் அணியப்பட்டன, காதில் அணிகலன் அணியும் போது ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.ஏழை எளிய மக்கள் காதில் குச்சி, இலை,சுடுமண் பொருட்களை அணிந்தனர்.செல்வாக்கு உள்ளவர்கள் தங்கத்திலான பொருட்களை அணிந்தனர், என்றார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

காலத்தால் அழியாத தமிழ் இலக்கியங்கள்!... காலத்தால் அழியாத தமிழ் இலக்கியங்கள்! தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்...
ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: தமிழக மாணவியி... ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: தமிழக மாணவியின் கள ஆய்வில் கண்டுபிடிப்பு! இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் பக...
தொல்லியல் துறையிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளின் தூண்ட... தொல்லியல் துறையிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளின் தூண்டுதலே கீழடி அகழாய்வுக்கு அடுத்த மாதம் மூடு விழாவா? தமிழர்களின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட கீழடி அக...
தொன்மையான கல்வெட்டுகள் அழிவிலிருந்து காக்கப்படுமா?... தொன்மையான கல்வெட்டுகள் அழிவிலிருந்து காக்கப்படுமா? செஞ்சி வட்டத்தில் உள்ள தொன்மையான கல்வெட்டுகளை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த...
Tags: