அழியும் அபாயத்தில் உள்ள இரண்டாம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்த 8-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு!

அழியும் அபாயத்தில் உள்ள இரண்டாம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்த 8-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு!

அழியும் அபாயத்தில் உள்ள இரண்டாம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்த 8-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு!

தமிழர்களின் அடையாளமாக காணப்படும் கல்வெட்டு ஒன்று, அழிவடையும் நிலையில் இருப்பதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

இலங்கையின் புராதன மன்னர்களுக்கும், தமிழகத்தின் பல்லவ மன்னர்களுக்கும் இடையில் இருந்த ராஜதந்திர தொடர்புகளைக் குறிக்கும் கல்வெட்டு அழிவடையும் ஆபத்தில் உள்ளது.

பல்லவ மன்னரான இரண்டாம் நந்திவர்மனின் ஆட்சி காலத்தில், 8-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும், துர்க்கை அம்மன் சிலை ஒன்றும் அழியும் நிலையில் உள்ளது.

தமிழகம், செங்கல்பட்டு, ஒழாளூரில் உள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த கல்வெட்டும், கற்சிலையும், சில வருடங்களுக்கு முன்னர் கட்டுமானப் பணியின் போது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கல்வெட்டில் இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையிலான பல்லவர் கால ராஜதந்திர மற்றும் நிர்வாக ரீதியான தொடர்புகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

மேலும், கி.பி 720 – 796 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த இரண்டாம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டில், இந்த காலப் பகுதியில் தமிழகத்துக்கு பயணம் செய்த இலங்கையின் ராஜதந்திரி தொடர்பான விபரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டையும், சிலையையும் பாதுகாக்குமாறு மரபுரிமை செயற்பாட்டாளர்களால் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும், இந்திய தொல்லியலாளர்களால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கீழக்கரை அருகே பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த சேதுபதிக... கீழக்கரை அருகே பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த சேதுபதிகள் காலச் சூலக்கல் கல்வெட்டு! ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப் பள்ளி மா...
திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு இடங்களில் பழமையான ... திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு இடங்களில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு! திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு இடங்களில், பழமையான இரு கல்வெட்டுகளை, த...
சிங்கபுரம் ரங்கநாதருக்கு மண்டபம் கட்டிய மன்னன் குற... சிங்கவரம் ரங்கநாதருக்கு கருங்கல் மண்டபம் கட்டிய மன்னன் குறித்த கல்வெட்டு! செஞ்சி அருகே சிங்கவரம் ரங்கநாதர் சுவாமிக்கு கருங்கல் மண்டபம் கட்டி புண்ணிய...
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 13ம் நூற்றாண்டு கல... ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு! ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவில் திருப்பணியின் போது, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஓய்சாள அரச...
Tags: 
%d bloggers like this: