பாலப்பட்டு கிராமத்தில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

பாலப்பட்டு கிராமத்தில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

பாலப்பட்டு கிராமத்தில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் பாலப்பட்டு கிராமத்தில் செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் லெனின், பள்ளிக் கல்வித்துறையின் மூலம் இயங்கிவரும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் முனுசாமி, பாலப்பட்டு அரங்க சிவக்குமார், துரைமுருகன் ஆகியோர் தொல்லியல் சார்ந்த கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது வீர நடுகல் ஒன்றை கண்டுபிடித்தனர். சுமார் 2 மீட்டர் உயரமும், 1 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பலகைக்கல்லில் கம்பீரத்தோற்றத்துடன் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள ஒரு வீரன், தன் இடது கையை முன்னோக்கி நீட்டி ஒரு வில்லை பிடித்துள்ளான். தன் வலது கையால் ஒரு அம்பை நாணில் ஏற்றி எய்வதற்கு தயாராக உள்ளான்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

அவனுடைய இடுப்பில் குறுவாள் ஒன்று செருகி வைக்கப்பட்டுள்ளது. வீரனின் கால்களுக்கு அருகில் நாய் ஒன்று அவ்வீரனின் இலைக்கி நோக்கி கோபத்துடன் உற்றுநோக்குவதாக செதுக்கப்பட்டுள்ளது.தொல்லியல் நோக்கில் ஆய்வு செய்யும்போது அவ்வீரன் ஊர் மக்களையும், அவர்தம் உடைமைகளையும் ஆடு, மாடுகளையும், எதிரிகளிடமிருந்தும், வன விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்து வந்ததும் அதன் காரணமாக தன் இன்னுயிரை இழந்திருக்கலாம் என்பதற்கு அவ்வீர நடுகல்லே சான்றாக இன்று வரை கம்பீரமாக நிற்கிறது. பக்கத்து ஊரான மாவட்டம்பாடிக்கும், பாலப்பட்டிற்கும் இடையே இதே போன்றதொரு வீர நடுகல் சற்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. நடுகற்கள் தமிழனின் வீரத்தையும், வரலாற்றையும் சான்றுரைக்கும் வரலாற்று ஆவணமாகும்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தஞ்சையில் 46 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மிகவு... தஞ்சையில் 46 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மிகவும் அரிதான நடராஜர் சிலை அமெரிக்க கண்காட்சியில் கண்டுபிடிப்பு! தஞ்சை அருகே 46 ஆண்டுகளுக்கு முன்பு கா...
தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு... தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு! கி.பி., 15ம் நுாற்றாண்டில், சேலத்தில் வெளியிட்ட நரசிம்மரின் உருவம், தம...
திருப்பூர் அருகே, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்... திருப்பூர் அருகே, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு! திருப்பூர் அருகே, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த, சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விள...
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 2 ஆயிரம் ஆண்டுகள்... கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு! கீழடியில் நடந்து வரும் நான்காம் கட்ட அகழாய்வில் சுடுமண் ...
Tags: 
%d bloggers like this: