தமிழர்களின் பழங்கால, ‘பிராமி’ எழுத்தில் திருக்குறள்!

தமிழர்களின் பழங்கால, 'பிராமி' எழுத்தில் திருக்குறள்!

தமிழர்களின் பழங்கால, ‘பிராமி’ எழுத்தில் திருக்குறள்!

தமிழர்களின் பழங்கால, ‘பிராமி’ எழுத்தில், திருக்குறளை அச்சிட்டு உள்ள தமிழ் வளர்ச்சித்துறை, அதை விரைவில் வெளியிட உள்ளது.

தமிழர்களின் பழங்கால எழுத்து முறை, பிராமி எழுத்து முறை எனவும், தமிழி எழுத்து முறை எனவும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில், கி.மு., 5ம் நுாற்றாண்டுக்கு முன்னிருந்தே, தமிழகத்தில், பிராமி எழுத்துகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

ஈரோடு மாவட்டம், கொடுமணல், பழநிக்கு அருகில் உள்ள பொருந்தல்; மதுரைக்கு அருகில் உள்ள, திருப்பரங்குன்றம், ஆனைமலை உள்ளிட்ட பல இடங்களில், பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள், கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிராமி எழுத்துக்களுக்குப் பின், வட்டெழுத்து, கிரந்த எழுத்து, தற்கால தமிழ் எழுத்து என, பல மாறுதல்களையும், சீர்திருத்தங்களையும் தமிழ் மொழி பெற்றுள்ளது. தமிழர்களின் தொன்மை எழுத்தான, பிராமி எழுத்துக்களை, தற்கால தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில், திருக்குறளை அக்கால எழுத்து முறைக்கு மாற்றி, தமிழ் வளர்ச்சித் துறை அச்சிட்டு உள்ளது.

தற்கால தலைமுறைக்கு, தமிழரின் பழங்கால வரலாற்றை கூறுவது, இலக்கியங்களாகவே உள்ளன. அவற்றை நாங்கள், தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை, மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், பிராமி எழுத்தில் திருக்குறள் நுாலை பதிப்பித்துள்ளோம். அந்நுாலில், தமிழி என்ற பழங்கால எழுத்துமுறை, தற்கால பயன்பாட்டுத் தமிழ் எழுத்து முறை, ஆங்கில எழுத்து முறை என்னும் மூன்று எழுத்துக்களில், இந்த புத்தகத்தை பதிப்பித்துள்ளோம். இந்த புத்தக உருவாக்கத்திற்கு, தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறை அறிஞர்களான, வசந்தி, பூங்குன்றன், குடந்தை வேலன் ஆகியோர் உழைத்துள்ளனர். இதன் வெளியீட்டு விழா, இரண்டு வாரங்களில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டிய ராஜன் தலைமையில் நடக்க உள்ளது”. என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர், விஜயராகவன் இதுகுறித்து கூறினார்.

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. Pingback: முனைவர்கா.காளிதாஸ்,அரசினர்கலைஅறிவியல்கல்லூரி.அறந்தாங்கி

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: