தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பழமலைநாதர் கோவிலில் 14 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பழமலைநாதர் கோவிலில் 14 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பழமலைநாதர் கோவிலில் 14 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூரில் கோவில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டிய போது 14 ஐம்பொன் சிலைகள் மற்றும் 7 பீடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பழஞ்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான பழமலைநாதர் கோயில் உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள, இக்கோவிலின் குடமுழக்கு பணிகள், 2012-லிருந்து நடைபெற்று வருகின்றன. கோவிலின் கட்டுமான பணிக்காகவும், கோவிலுக்கு வரும் பக்தர்களின் குடிநீர் தேவைகளுக்காகவும் கோவில் வளாகத்தில், 200 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கோயில் வளாகத்தில் நேற்று பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அப்போது, 6 அடி ஆழத்தில் சிலை ஒன்று தென்பட்டது.

இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் அந்த இடத்தில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, அடுத்தடுத்து சிலைகள் கிடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக, பள்ளம் தோண்டப்படும் இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டன. தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து 1 விநாயகர் சிலை, 4 அம்பாள் சிலைகள், 2 துவாரபாலகிகள் சிலை, 1 நடராஜர் சிலை, மேலும் பெயர் தெரியாத 6 சிலைகள் உட்பட மொத்தம் 14 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இவைதவிர 7 பீடங்கள் மற்றும் உடைந்த நிலையிலான சிலைகளும் கிடைத்துள்ளன. இந்தச் சிலைகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை, இவற்றின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தொல்லியல் துறையினரின் ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும். தற்போது சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 2 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: