தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த “தமிழவேள்” உமாமகேசுவரன் பிள்ளை!

தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த “தமிழவேள்” உமாமகேசுவரன் பிள்ளை நினைவு நாள் : 09.05.1941

இவர் ஆற்றிய தொண்டு சில….

  • இலவசமாக ஏழைகளுக்கு வழக்காடி அனைத்து வழக்குகளில் வெற்றி பெற்றதால் பிரிட்டிஷ் அரசு தானே முன்வந்து அரசு கூடுதல் வழக்கறிஞர் பதிவி வழங்கப்பட்டது.
  • 14.05.1911 முதன்முதலில் கரந்தை தமிழ்ச்சங்கம் தோற்றுவித்தவர்.
  • 27.09.1915 பல்லாயிரம் நூல்கள் அமைத்து தமிழகத்தில் முதன்முதலில் நூலகம் அமைத்தவர்.
  • 1915 முதன்முதலில் கட்டணம் இல்லா நூலகம் அமைத்தவர்.
  • 06.10.1916 தமிழ்ச் சங்கத்தின் சார்பில் செந்தமிழ் கைத்தொழில் தொடங்கியவர்.
  • 1919 தமிழ் செம்மொழியாக முதன்முதலில் தீர்மானம் போட்டவர்.
  • 04.09.1921 கரந்தை தமிழ்ச்சங்கம் 10 ஆம் ஆண்டு விழா கீழையூர் சிவ சிதம்பரம் பிள்ளை தலைமையில் நடத்தினார்.
  • 1922 தமிழுக்கு தனியே பல்கலைக்கழகம் அமைக்க முதன்முதலில் தீர்மானம் கொண்டு வந்தவர்.
  • 16.02.1927 தமிழகத்தில் முதன்முதலில் கூட்டுறவுச் சங்கம் அமைத்தவர்.
  • 28.04.1928 தஞ்சையில் கட்டணம் இல்லா மருத்துவமனை தனது சொந்த செலவில் அமைத்தவர்.
  • நீராறும் கடலுடுத்த என தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்.
  • திருவையாறு கல்லூரியில் சமஸ்கிருத மொழி மட்டும் கற்பித்து வந்ததை மாற்றி தமிழை கற்பிக்க செய்தவர்.
  • சமஸ்கிருத மொழி கல்லூரி என்று இருந்ததை மாற்றி அரசர் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்தார்.
  • அரசு கோப்புகளில் ஸ்ரீமான்,  ஸ்ரீமதி, என்ற வடசொறகளை நீக்கி “திருமகன்”, “திருவாட்டி” என்ற சொல்லையும்.
  • “பத்திராதிபர்”, சந்தா”, விலாசம்”, வி.பி.பி”, போன்ற சொற்களுக்கு பதில் நல்ல தமிழில் “பொழிற்றொண்டர்”, கையொப்பத் தொகை”, உறையுள்”, விலை கொளும் அஞ்சல்”, போன்ற சொற்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசு இதழில் முதன்முதலில் உத்தரவு பெற்றவர்.
  • யாழ் நூல், கபிலர், நக்கீரர், தொல்காப்பியம் போன்ற எண்ணற்ற நூல்களை பதிப்பித்து கொடுத்தவர்.
  • நீதிகட்சி (தென்னிந்தி நலமுடன் உரிமை சங்கம்) தஞ்சை மாவட்டம் முழுவதும் பொறுப்பேற்று தீவிரமாக செயல்பட்டவர்.
  • ஏழைகளுக்கு உதவிகள் வீடு, நிலம், பள்ளிகள், கிராமபுற மக்களுக்காக உழைத்ததால் 1936 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு சார்பில் பனங்கல் அரசர் (ராமநிங்கர்) அவர்களால் ” ராவ்பகதூர்” பட்டம் வழங்கி பாராட்டு பெற்றவர்.
  • முதல், இடை, கடைச்சங்கம் அழிவிற்குப் பிறகு தமிழ் மொழி தாழ்வு நிலை அடைந்தது, இதனைப் பண்டைய காலம் போல் மீண்டும் ஏற்றம் பெற உழைத்தவர்கள் இருவர் ஒருவர் த.வே உமாமகேசுவரன் பிள்ளை, அடுத்தவர் பாண்டித்துரை தேவர்.
  • மதுரைத் தமிழ்ச் சங்கதிற்கு தோற்றுவிக்கப்பட்டச் சங்கம் கரந்தை தமிழ்ச்சங்கம் இதனை ஐந்தாம் தமிழ்ச்சங்கம் என்று உயர்த்தியதற்காக “நுங்கன்” (நுங்கன் என்றால் வலிமையானவன்)
    என்ற பட்டம் பெற்றவர்.
  • மாகாத்மா காந்தி தஞ்சை உக்கடை அவுசில் தங்கியிருந்தபோது பிராமணர் அல்லாதாருக்கு இழைக்கப்படும் அவலங்கள், இன்னல்கள் அனைத்தும் விரிவாக காந்தி யிடம் எடுத்துரைத்தார்.
  • 11.06.1934, தமிழை அழிக்க முற்படும் தமிழ் பகைவர்களை கண்டித்து சென்னையில் மாபெரும் மாநாடு நடத்தியவர்.
  • 27.08.1937 ராஜாஜி கொண்டு வந்த கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து கரந்தை தமிழ்ச் சங்கத்தில் முதன்முதலில் கண்ட கூட்டமும், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் பிறகு தான் தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு தீவிரம் அடைந்தது.
  • 26.12.1937 கி.ஆ பெ. விசுவநாதம் ஒருங்கிணைப்பில் சென்னை மாகாண தமிழ் மாநாடு நடைபெற்றது பத்தாயிரம் பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட எழுச்சி ஊர்வலம் நடத்தி வெற்றி கண்டார். சோமசுந்தர பாரதியார் தலைமையில், த.வே.உமாமகேசுவரன் பிள்ளை வரவேற்பாளராக இருந்து நடத்திய மிகப்பெரிய மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் தமிழ் அறிஞர்களோடு முதன்முதலில் கலந்து கொண்டு இந்தியை எதிர்த்து பேசினார்.
  • 15.04.1938 கரந்தை தமிழ்ச் சங்கம் வெள்ளி விழாவில் “தமிழவேள்” என்ற பட்டத்தை நாவலர் சோமசுந்தர பாரதியார் உமாமகேசுவரன் பிள்ளைக்கு வழங்கி பாராட்டு பெற்றார்.
  • 1939 திருச்சியில் நடந்த அகில இந்திய தமிழ் மாநாட்டில் நாவலர் சோமசுந்தர பாரதியார், திரு. வி.க. மறைமலை அடிகள், பாரதிதாசன், தந்தை பெரியார் ஆகியோரை ஒருங்கிணைத்தவர், த.வே.உமாமகேசுவரன்பிள்ளை. இந்த மாநாட்டில் “தை முதல் நாள்” தமிழ்ப்புத்தாண்டு என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • இரவிந்தரநாத் தாகூர் உருவாக்கிய” சாந்தினிகேத்தனைப் போல்” கரந்தை தமிழ்ச் சங்கத்தையும் அமைக்க வேண்டும் என்று நினைத்து அதன் தன்மையை நேரில் அறிய கல்கத்தாவில் தனது நண்பர் கணேசனோடு சென்று பார்த்து, பிறகு இந்த பல்கலைக்கழகம் காசியில் இருப்பதை அறிந்து அங்கு சென்று அதன் அமைப்புகளை பார்வையிட்டு கடுமையான அலைச்சலினால் நலிவுற்று, நோய்வாய்ப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் ஐயோத்தியில் உள்ள மருத்துவமனையில் 09.05.1941 காலமானார்.

தமிழுக்காக வாழ்ந்த இப்பெருமகனாரை தமிழ் சமுதாயம் மறக்கக்கூடாது.

வாழ்க தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை! வெல்க இவரது தமிழ்த்தொண்டு!

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: